• Earthquake: டெல்லியில் நில அதிர்வு.. பீதியில் உறைந்த மக்கள்... தலைநகரில் பெரும் பரபரப்பு..!


துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு உலகின் பல பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் அடிக்கடி உணரப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லி – என்.சி.ஆர். பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலையில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தாக்கமே இந்த அதிர்வுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்த நில அதிர்வின் மையம் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலையில் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில்  உள்ள குல்மர்க் மாவட்டத்தில் இருந்து 418 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் இந்த நில அதிர்வின் மையம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க 



  • ITR Filing Option: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மறந்துட்டிங்களா?.. இதோ, உங்களுக்கான 3 ஆப்ஷன்..!


2022-23 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. 6.77 கோடி பேர் தங்களது கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 31ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 5.83 கோடி கணக்குகளை காட்டிலும், நடப்பாண்டில்  16.1% கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைத்தாலும், கூடுதல் அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் படிக்க 



  • Chandrayaan 3: சாதித்தது இந்தியா.. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது சந்திரயான் 3.. நாட்டிற்கே பெருமை..!


சந்திரயான் 3 விண்கலம் நிலவின் நீள்வட்டப் சுற்றுப்பாதையில், வெற்றிகரமாக நுழைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.  கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் பூமியிலிருந்து நிலவுக்கு செல்லும் தூரத்தில் மூன்றில் இரண்டு பங்கு கடந்துள்ளதாக,  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை தெரிவித்து இருந்தது. மேலும் படிக்க 





  • Laptop Import Ban: லேப்டாப், கணினி மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தற்காலிகமாக திரும்பப்பெற்ற மத்திய அரசு







மடிக்கணினி, கணினி (பெர்சனல் கம்ப்யூட்டர்), டேப்லெட் ஆகியவற்றை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய மத்திய அரசு நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்தது. கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, HSN 8741 விதியின் கீழ் வரும் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் ஆகியவற்றின் இறக்குமதி தடைசெய்யப்பட்டது. மேலும் படிக்க 



  • Djibouti Base: ஹம்பாந்தோட்டையை காட்டிலும் இதுதாங்க ஆபத்து..இந்தியாவுக்கு தலைவலியை தரும் சீனாவின் புதிய கடற்படை தளம்..


மாறி வரும் உலக சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு பெரும் சவால் விடுத்து வரும் சீனா, அனைத்து வகைகளிலும் தன்னை தயார்படுத்தி வருகிறது. பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, உக்ரைன் விவகாரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஷியாவை கண்டு, அதிலிருந்து பாடம் கற்று கொண்டுள்ளது. அதன் விளைவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் படிக்க