தமிழ்நாடு:
- சென்னை வந்தார் குடியரசுத்தலைவர் - ஆளுநர், முதலமைச்சர் நேரில் சென்று வரவேற்பு
- சென்னை வந்த குடியரசுத் தலைவர் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்
- தமிழ்நாட்டில் 2-வது நாளாக 33 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
- தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என அமித்ஷாவின் இந்தி குறித்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி
- கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி சென்னையில் தொடங்கியது
- திமுக எல்லா தொண்டர்களுக்கும் பொதுவானது" - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
- எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததையடுத்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு
- சென்னை கண்ணகி நகரில் போதையில் இருந்து விடுபடுபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தற்காலிக அரசு வேலை வழங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ. 22 லட்சம், கணக்கில் வராத ரூ16.6 லட்ச மதிப்பிலான பொருட்கள் உள்ளிட்ட நில ஆவணங்களையும் அமலாக்கத்துறை கைப்பற்றியதாக ட்வீட்.
- தி.மு.க.,வின் கொள்ளைப்பணத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உதவலாமே; நடைபயணத்திற்கு மத்தியில் அண்ணாமலை பேச்சு
- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல்
இந்தியா
தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோளில் 5.8ஆக பதிவு
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு; மூன்று இராணுவ வீரர்கள் வீர மரணம் - ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டிய தீர்மானத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
சந்திரயான் 3 விண்கலம் நிலவின் நீள்வட்டப் சுற்றுப்பாதையில், வெற்றிகரமாக நுழைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவிப்பு
- இறக்குமதி தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நவம்பர் 1ஆம் தேதி வரை திரும்ப பெறுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவிப்பு
- மணிப்பூரில் மீண்டும் இனக்கலவரம்; மூவர் கொலை
- இந்தியா கூட்டணி கட்சிகளின் அடுத்த கூட்டம், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி, மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெறும் என அறிவிப்பு
உலகம்
ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட 20 இந்தியர்களும் தாயகம் திரும்பினர்.
விளையாட்டு
- இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
- ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் இன்று மோதிக்கொள்கின்றன