• GST Council Meeting: இணைய விளையாட்டுகள் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரி..எப்போதிலிருந்து நடைமுறை? வெளியான அறிவிப்பு


ஜிஎஸ்டி கவுன்சிலின் 51ஆவது கூட்டத்தில், இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இணைய விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகள் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்திற்கு பிறகு, இந்த முடிவு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க 



  • Tomato Price: வரலாறு காணாத அளவு உயர்ந்த தக்காளியின் விலை.. 260 ரூபாய்க்கு விற்பனை.. எங்கே தெரியுமா?


டெல்லியில் தக்காளி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நம் நாட்டு சமையலில் மிக முக்கிய பங்கு வகிப்பது தக்காளி. ஜூன் மாதம் கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளாவில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பருவமழை தீவிரமடைந்தது. இதனால் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் படிக்க



  • Article 370: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம்..மனுதாரர்கள் சார்பாக ஆஜரான 18 வழக்கறிஞர்கள்..


ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான தினசரி விசாரணை இன்று முதல் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மொத்தம் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்களுக்கு ஆதரவாக 18 வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. மேலும் படிக்க 



  • Lok Sabha Speaker: இனி வரமாட்டேன்..அப்செட்டான மக்களவை சபாநாயகர்..நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணிக்க போகிறாரா?


மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஒரு சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் அடங்காத நிலையில், மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் மணிப்பூரில் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. குறிப்பாக, பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வமாக அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில், மேலும் இரண்டு இளம் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தின்போது, 800 பேர் சேர்ந்து ஒரு இளைஞரை அடித்து கொலை செய்துள்ளனர். மேலும் படிக்க 



  • PM Modi: சந்திரயான், ககன்யான் திட்டங்களின் வெற்றிக்கு பெண் விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றியுள்ளனர்: பிரதமர் மோடி


ஜி-20 அமைப்புக்கு இந்தியா, தலைமை வகித்து வரும் நிலையில், பெண்கள் முன்னேற்றத்திற்கான அமைச்சர்கள் மாநாடு இன்று குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்றது. இதில், காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி, "பெண்களின் பொருளாதார முன்னேற்றம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்" என்றார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்தியா முன்னேறி வருகிறது. பெண்களால் உலகம் செழிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளில் 46% பெண்களாக உள்ளனர். மேலும் படிக்க