டெல்லியில் தக்காளி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


நம் நாட்டு சமையலில் மிக முக்கிய பங்கு வகிப்பது தக்காளி. ஜூன் மாதம் கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளாவில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பருவமழை தீவிரமடைந்தது. இதனால் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தக்காளி உட்பட பிற காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளியின் விலை கடந்த 2 மாதங்களாக உச்சத்தில் உள்ளது. தக்காளியின் விலை உயர்வு அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது. எனவே தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு சார்பில் பல மாநிலங்களில் குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.


ஆனால் தற்போது தக்காளி உற்பத்தி செய்யும் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு  மீண்டும் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சில பகுதிகளில் வரலாறு காணாத அளவு விலை உச்சத்தில் உள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ தக்காளி சுமார் 203 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசில் அன்னை பண்ணை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக வியாபார சங்கத்தின் சார்பாக ஒருவர் கூறுகையில், “ காலநிலை மாற்றங்கள் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவின் காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சில்லரை விலையும் அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.


டெல்லி ஆசாத்பூரில் இருக்கும் சந்தையில், ஒரு கிலோ தக்காளி 170 முதல் 220 ரூபாய் வரை விறபனை செய்யப்பட்டது. ஆசாத்பூர் சந்தைக்கு நேற்று வெறும் 15 சதவீதம் அளவுக்கு தக்காளி வரத்து இருந்தது. அதாவது கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வெறும் 6 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலை அடுத்த 10 நாட்கள் வரை தொடரும் என்றும், அதன்பின் படிப்படியாக சீராகும் எனவும் தெரிவித்துள்ளனர்.  


Jailer Trailer: ‘ஓரளவுக்குத்தான் பேச்சு எல்லாம்’ .. மாஸ் காட்டும் ரஜினி.. பட்டையை கிளப்பும் ஜெயிலர் ட்ரெய்லர்..!


MP Kanimozhi Karunanidhi: முதலமைச்சர் பாராட்டிய டிவிட்டர் பதிவு நீக்கியதன் பின்னணி என்ன? எம்.பி. கனிமொழி கேள்வி!