- பான்-ஆதார் எண்ணை இணைக்கவில்லையா... இன்றுதான் கடைசி நாள்... முடிகிறது காலக்கெடு...
இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கியமான ஆவணங்களுடன் இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, ஆதார் மற்றும் பான் அட்டையை இணைக்க பலமுறை தேதி நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றோடு (ஜூன் 30) காலக்கெடு நிறைவடைகிறது. நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவில் அபராதம் செலுத்திய பிறகே பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும் என்பது நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- கொத்து கொத்தாக வேலையை விட்டு அனுப்பும் Xiomi.. வேதனையில் இந்திய பணியாளர்கள்..
சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேம்படுத்த பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக தற்போது 1,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக தெரிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வரும் நிலையில் சியோமி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்திய ஊழியர்கள் பெரும்பாலும் இருப்பதாக தெரிகிறது.மேலும் படிக்க
- கலவரக்காரர்கள், ராணுவத்தினர் இடையே மோதல்... துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு.. மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூரில் இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மேற்கு இம்பால் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள், இந்திய ராணுவத்தினர் ஆகியோருக்கிடையே மோதல் வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படிக்க
- மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்..? பக்காவாக ஸ்கெட்ச் போடும் பாஜக.. வருகிறது முக்கிய முடிவு
கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, வரவிருக்கும் தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அடுத்த மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணியை தொடங்கியுள்ளது பாஜக. அந்த வகையில், மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 3ம் தேதி) நடைபெற உள்ளது.மேலும் படிக்க
- எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம்...வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
அடுத்த மக்களவை தேர்தல் இன்னும் 9 மாதங்களில் நடைபெறுகிறது. எனவே, வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. அதன் முதல் முயற்சியாக, பிகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் 16 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம், ஜூலை மாதம் பெங்களூருவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க