Aadhaar-PAN Linking: ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆதான் மற்றும் பான் அட்டையை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆதான்-பான் இணைப்பு


இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கியமான ஆவணங்களுடன் இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக ஆதார் பான் கார்டை இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதேசமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறிய உதவப்படுகிறது. 


தற்போது ரூ.1,000 அபராதத்துடன் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு அபராதத்துடன் 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனை மத்திய அரசு ஜூன் 30ஆம் தேதி வரை நீடித்திருந்தது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் தங்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்திய பிறகே பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இன்றுடன் அவகாசம் முடிவு


இந்நிலையில், பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. நாளை ஒரு நாள்  மட்டுமே பான்-ஆதார் எண்ணை இணைப்பதற்கு கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒருவேளை, இந்த இணைப்புகளை செய்யாவிட்டால், கணக்கு தொடங்குவதற்கு தேவையான முதன்மை ஆவணங்கள் என்பதால் வங்கிக் கணக்கை திறக்க முடியாது. அதேபோன்று, புதிய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பெற முடியாது. பாஸ்போர்ட் பெறுவதற்கு பான் கார்டு கட்டாயம் என்பதால் வெளிநாடு பயணம் செய்ய முடியாது.


யாரெல்லாம் இணைக்க வேண்டும்


வருமான வரிச்சட்டத்தின்படி, 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி பான் கார்டு வழங்கப்பட்ட அனைவருமே ஆதார் கார்டுடன் பான் கார்டை கட்டாயமாக இணைக்க வேண்டும். ஜம்மூ காஷ்மீர், அசாம், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள்,  அயலக இந்தியர்கள், 80 வயதை தாண்டியர்கள் இந்த இணைப்பு செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இணைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?



  • ஆதார் பான இணைப்புக்கு முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்

  • அந்த இணையதளத்தில் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

  • இணையதளப் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) பதிவு செய்ய வேண்டும்.

  • ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.

  • விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்

  • இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரம் தெரியவரும்.