புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு; பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட செங்கோல்
ரூ.971 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவின் ஒரு பகுதியாக அதன் வளாகத்தில் இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் தமிழகத்தில் இருந்து சென்ற 21 ஆதீனங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூஜைக்கு பிறகு செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. செங்கோலை கையில் ஏந்தியபடி ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். பின்னர் நாடாளுமன்ற உள்ளே சபாநாயகர் இருக்கை அருகே அதனை நிறுவினார். மேலும் படிக்க
- விரிவாக்கம் செய்யப்பட்ட கர்நாடகா அமைச்சரவை - அமைச்சராக பதவியேற்ற 24 பேர்
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து மே 20 ஆம் தேதி முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும், 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதனையடுத்து நேற்று மேலும் 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். பல்வேறு சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- கேரளா ஸ்டோரி உண்மையில்லை - கமல் பரபரப்பு பேச்சு
பெரும் சர்ச்சைகளை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படம் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “வெறுப்பு பிரச்சார படங்களை எதிர்ப்பவன் நான். உண்மை கதையின் அடிப்படையில் படத்தை எடுத்தால் மட்டும் போதாது. அது உண்மையாக இருக்க வேண்டும். ஆனால், தி கேரளா ஸ்டோரி கதை உண்மையான கதையல்ல” என கூறினார். மேலும் படிக்க
- மக்களிடம் தலைவணங்கி மன்னிப்பு கேட்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா..
மேற்குவங்கம் பூர்பா மேதினிபூர் மாவட்டத்தில் எக்ரா பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை விபத்து நடந்து 11 நாள்கள் ஆன நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான மம்தா, காதிகுல் கிராமத்திற்கு இன்று நேரில் சென்று மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் படிக்க
- பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்...7 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு..!
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான், கேரளா, டெல்லி, பஞ்சாப், தெலங்கானா, மேற்குவங்கம், பீகார் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கூட்டத்தை புறக்கணிப்பது மாநிலத்தின் வளர்ச்சியைப் புறக்கணிப்பதற்குச் சமம் என விமர்சனம் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க