- PM Modi: ’என்னை மன்னிச்சிடுங்க..’ மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி..! என்ன காரணம்?
டெல்லியில் ஜி20 மாநாட்டின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி, அம்மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 20 நாடுகள் அங்கம் வகிக்கும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பாக இருக்கும் ஜி20 அமைப்புக்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகிக்கிறது. இதனால் அந்த அமைப்பில் பல்வேறு கூட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. வர்த்தகம், பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்து இந்த கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க
- Punjab President Rule: அதிகாரப் பசி.. சி.எம்மாக விரும்புகிறார் பன்வாரிலால் புரோகித்.. வெளுத்து வாங்கிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்..!
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்குவங்கம், டெல்லி என இந்த பட்டியல் நீள்கிறது. சமீபத்தில், டெல்லி அரசின் அதிகாரங்களை நிலைநாட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் அரசின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியது. மேலும் படிக்க
- Transgender Reservation: சமூக நீதியின் அடுத்த உச்சம்... திருநர்களுக்கு இட ஒதுக்கீடு? உச்ச நீதிமன்றம் அதிரடி
ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் சாதியின் அடிப்படையில் இங்கு பாகுபாடு காட்டப்பட்டது என்றால், அமெரிக்க போன்ற நாடுகளில் நிறத்தின் அடிப்படையில் இனத்தின் அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்பட்டனர். எனவே, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கல்வியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களை முன்னேற்றிவிடும் நோக்கில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தேர்தலிலும் அவர்களுக்கான இடத்தை உறுதி செய்து வருகிறது இடஒதுக்கீடு முறை. மேலும் படிக்க
- Zika Virus: இந்தியாவில் பரவும் ஜிகா வைரஸ்.. அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்ன? எப்படி தற்காத்துக்கொள்ளலாம்..
மும்பையின் செம்பூரில் ஜிகா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை பிரிஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) உறுதிப்படுத்தியுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்திய 79 வயது முதியவர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் மேற்கு நைல் வைரஸ் போன்ற நோய்களைப் பரப்புவதற்கும் காரணமான ஏடிஸ் ஈஜிப்டி கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவுகிறது. மேலும் படிக்க
- MP Election: மூன்று மாதத்தில் தேர்தல்.. மத்திய பிரதேசத்தில் சத்தம் இல்லாமல் சம்பவம் செய்த பாஜக
பாஜக ஆளும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று மத்தியப் பிரதேசம். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நடுவில் ஓராண்டை தவிர கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் பாஜக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மாநிலம். பாஜக ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவி வந்தது. மேலும் படிக்க