- அரசியல் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படுமா? பரபரப்பான சூழலில் அனைத்துக்கட்சி கூட்டம்
நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. 19 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடர், வரும் டிசம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இது தொடர்பான அறிவிப்பை எக்ஸ் வலைதளத்தில் கடந்த 9ஆம் தேதி வெளியிட்டிருந்தார். மேலும் படிக்க..
- உத்தரகாசியில் மஞ்சள் எச்சரிக்கை, பனிப்பொழிவு அபாயம்.. 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் சவால்..!
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாராவில் கட்டுமான சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இன்றுடன் (நவம்பர் 26) 15வது நாளை எட்டியுள்ளது. சுரங்கத்தை போட வேண்டிய 80 செ.மீ., விட்டம் கொண்ட கடைசி 10 மீட்டர் குழாய் பதிக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெறும் நிலையில், துளையிடும் இயந்திரம் பலமுறை பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் படிக்க..
- காலம் கடந்து நிற்கும் இந்திய அரசியலமைப்பு: மக்களின் மனசாட்சியாக மாறியது எப்படி?
கடந்த 1949ஆம் ஆண்டு, நவம்பர் 26ஆம் தேதி, நமது அரசியலமைப்பை அரசியல் நிர்ணய சபை ஏற்று கொண்டது. இதை குறிக்கும் வகையில், அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 74 ஆண்டுகளாக பல சவால்களை கடந்து, இந்திய அரசியலமைப்பு தாங்கி நிற்கிறது. நாட்டின் அடையாளமாக கருதப்படும் அரசியலமைப்பு நீண்ட காலம் தாங்கி நிற்பது எல்லாம் அரிதான நிகழ்வு. மக்களின் உரிமைகளை நிலைநாட்டி அரிதான ஆவணத்தை அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் எப்படி தயாரித்தார்கள் என்பதை தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க..
- பிரதமர் மோடி திருப்பதிக்கு இன்று விசிட்! தரிசனத்தில் மாற்றம் - உச்சகட்ட பாதுகாப்பு
தெலங்கானா பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று மாலை விமானம் மூலம் திருப்பதி செல்ல உள்ளார். உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் படிக்க..
- நீதிக்காக 15 ஆண்டுகால போராட்டம்! பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு பெண் பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் நிகழ்ந்த மறக்க முடியாத கொலை சம்பவங்களில் ஒன்றுக்கு இன்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைநகர் டெல்லியில் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன், வேலை முடிந்து வீட்டிற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் படிக்க..
- சீனாவில் அதிகரிக்கும் நிமோனியா பாதிப்பு! இந்தியாவில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!
சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வடக்கு சீனாவில் உள்ள குழந்தைகளுக்கு H9N2 மற்றும் சுவாச நோய்களின் பரவலை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் படிக்க..