• இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ.. இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..  


இந்தியாவில் முதல் தண்ணீரில் செல்லும் மெட்ரோ (Water Metro) இன்று (ஏப்ரல் 25) முதல் இயங்க உள்ளது. கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் இந்த முதல் வாட்டர் மெட்ரோவை கொடியசைத்து தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்வதற்காக கேரள மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. மேலும் படிக்க..



  • அதிநவீன குவாண்டம் தொழில்நுட்பம்: டாப் 6 நாடுகள் பட்டியலில் இணைந்த இந்தியா..


ரூ.6003.65 கோடி செலவில் தேசிய குவாண்டம் இயக்கத்தை செயல்படுத்தியதன் மூலம் குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் 6 முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது. அமெரிக்கா, ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் குவாண்டம் தொழில்நுட்பம் தொடர்பாக தனியே திட்டம் உருவாக்கி செயல்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. மேலும் படிக்க..



  • சூடு பிடிக்கும் கர்நாடகா தேர்தல் களம்.. இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரியங்கா காந்தி வத்ரா..


224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்றும், நாளையும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். மேலும் படிக்க..



  • மீண்டுமா? விமானத்தில் அமெரிக்க பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர்.. மதுபோதையில் விபரீதம்..


சமீப காலமாக, விமானத்தில் பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மேலும் படிக்க..



  • கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதி..


கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாஜகவை நமக்கான கட்சி என நினைக்கின்றனர். இதன் காரணமாக கர்நாடகாவில் மீண்டும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.  மேலும் படிக்க..



  • மும்பையில் லிவ் இன் பார்ட்னரை நண்பருடன் சேர்ந்து கொலை செய்த இளம் பெண்..


மும்பையில் 27 வயது இளம் பெண் ஒருவர் மற்றும் அவரது ஆண் நண்பர் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். டோம்பிவிலி பகுதியில் 55 வயது நபர் கொலை தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அந்த இளம் பெண்ணும் 55 வயது நபரும் லிவ் இன் பார்ட்னராக வாழ்ந்துள்ளனர். இதில் முறிவு ஏற்படவே அந்தப் பெண் தனது ஆண் நண்பருடன் இணைந்து லிவ் இன் பார்ட்னரை கொலை செய்துள்ளார். மேலும் படிக்க..