• “நிலவில் நடைபயணம் தொடங்கிய சந்திரயான் 3-இன் பிரக்யான் ரோவர்” இஸ்ரோ போட்ட ட்வீட்


சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “சந்திரயான் 3 ரோவர், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது, நிலவிற்காகவே உருவாக்கப்பட்டது சந்திரயான் 3 ரோவர் லேண்டரில் இருந்து இறங்கி, நிலவின் மேற்பரப்பில் தனது பயணத்த தொடங்கியது. கூடுதல் விவரங்கள் விரைவில்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • "சந்திரயானின் வெற்றி.. மனிதகுலத்தில் மகத்தான சாதனை.." ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் உள்பட தலைவர்கள் வாழ்த்து..!


ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சந்திரயான் 3 ஏவுகணையில் இருந்த விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தன் கால்தடத்தை பதித்தது. சந்திரயான் 3 விண்கலத்தை உருவாக்கிய இஸ்ரோவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. மேலும் படிக்க



  • ‘இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல! உலகளவில் கிடைத்த பெருமை’.. வீர முத்துவேலுக்கு அழைப்புவிடுத்த முதல்வர்!


சந்திரயான் - 3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதால், அந்த பகுதியை அடைந்த முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது.  இதனிடையே இஸ்ரோவின் திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது தகவல் மட்டும் சொல்லுங்கள். நான் உங்களை சந்திக்கிறேன். கட்டாயம் சந்திக்கலாம். எல்லாரும் வாழ்த்து சொல்லுங்கள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் படிக்க



  • சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடியகொட்டிய மழை..


சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து விடிய விடிய மிதமான கொட்டியது. குறிப்பாக கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் மிதமானபெய்தது. தற்போது வரையில் கருமேகங்கள் கூடியிருப்பதால் சென்னை மாநகர் முழுவதும் காலை 8 மணி வரை இரவு நேரம் போன்றே காட்சியளித்தது. இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க



  • சந்திரயான் 3 மிஷன்.. வரலாறு படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள்.. ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!


சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய மெதுவாக தரையிறங்கியது. இதனால், உற்சாகமடைந்த முன்னாள், தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து முன்னாள் இந்திய வீரர்களான வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர் முதல் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் வரை இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியுள்ளனர். மேலும் படிக்க