தமிழ்நாடு:



  • நிலவில் வெற்றிகரமாக தரையிரங்கியது சந்திரயான் 3 விண்கலம் - தமிழ்நாடு முழுவதும் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம் 

  • சந்திரயான் 3 விண்கலம் மூலம் சாதனை படைத்த இந்தியா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து 

  • இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் 

  • சந்திரயான் 3 திட்ட இயக்குநராக செயல்பட்ட தமிழ்நாட்டின் வீர முத்துவேல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்

  • தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் பயணமாக இன்று கோவை செல்கிறார் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 

  • டாஸ்மாக் கடைகளில் அனைவருக்கும் தெரியும்படி நிரந்தர விலைப்பட்டியல் வைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு 

  • சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை - அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரனுக்கு விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 

  • வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

  • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில் 10 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு - தொ.திருமாவளவன் பேச்சு 


இந்தியா: 



  • சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது - நிலவில் கால்பதித்த 4வது நாடானது இந்தியா

  • சந்திரயான் 3 மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கிய முதல்நாடு பெருமையை பெற்ற இந்தியா - நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

  • சந்திரயான் 3 வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானது என பிரதமர் மோடி பெருமிதம்

  • மிசோராமில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து 18 தொழிலாளர்கள் பலி - நிவாரணத்தொகை அறிவிப்பு 

  • காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் - பிரதமர் மோடியை சந்தித்து முறையிட முடிவு 

  • நாக்பூர் விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • 100 நாள் வேலை திட்டத்தில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ.6,366 கோடி பாக்கி வைத்திருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு 

  • தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த கோரி மண்டியாவில் விவசாயிகள் உண்ணாவிரதம்

  • நிலவைத் தொடர்ந்து அடுத்து சூரியனில் ஆய்வு - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்


உலகம்:



  • உக்ரைன் ராணுவம் ரஷ்யா மீது டிரோன் தாக்குதல் -  மாஸ்கோவில் விமான போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தம் 

  • சந்திரயான் 3 வெற்றி - உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு பெருமிதம் சேர்ப்பதாக மக்கள் பாராட்டு 

  • வடகொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் அரசு தகவல் 

  • கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீ - இதுவரை 18 பேர் உயிரிழப்பு 

  • தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ரமபோசா உடன் சந்திப்பு

  • நேபாளத்தின் காத்மண்டு நகரில் பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் 8 பயணிகள் உயிரிழப்பு 


விளையாட்டு:



  • உலகக்கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதிய இறுதிப்போட்டியின் 2-வது சுற்றும் 'டிரா', இன்று டை பிரேக்கர் போட்டி 

  • உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

  • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் முன்பாக இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்துடன் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் மோதல் 

  • இந்தியா - அயர்லாந்து இடையிலான 3-வது டி20 போட்டி மழையால் ரத்து 

  • 4 நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆக்கி தொடரில் இந்திய மகளிர் அணி 3வது இடத்தை பிடித்தது