இந்தியா புதிய வரலாறு படைத்து, ஆகஸ்ட் 23ம் தேதியான நேற்று சந்திரயான் - 3 மாலை 6.04 மணிக்கு நிலவில் மெதுவாக தரையிறங்கியது. இதனால், உற்சாகமடைந்த முன்னாள், தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். 


முன்னாள் இந்திய வீரர்களான வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர் முதல் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் வரை இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியுள்ளனர். அவை பின்வருமாறு.. 






சேவாக் ட்விட்டரில், “ இந்தியாவின் சந்திரயான் - 3 நிலவில் தரையிறக்கம் செய்து வரலாறு படைத்தது. இந்த வரலாற்றுப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட இஸ்ரோ மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்!” என குறிப்பிட்டார். 






கவுதம் கம்பீர், “வெல் டன் இந்தியா!” எனவும், தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, “நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா. நம் அனைவருக்கும் பெருமையான தருணம் மற்றும் இஸ்ரோ அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.” என பதிவிட்டு இருந்தனர். 






சூர்யகுமார் யாதவ், “வரலாறு! சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கிய அனைத்து இந்திய நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! நமது நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் வெற்றிக்காக மிகவும் பெருமைப்படுகிறோம்” என்றார். 






இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், "வரலாறு. இந்த அற்புதமான சாதனைக்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்."






மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், “வாழ்த்துக்கள் இஸ்ரோ. ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான தருணம். உங்கள் அர்ப்பணிப்புக்கும் உறுதிக்கும் வாழ்த்துகள்." என தெரிவித்தார்.