Morning Headlines: 



  • பிரதமர் மோடி அமெரிக்க பயணம்:


அரசு முறை பயணமாக, பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைந்துள்ளது.


இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐ.நா சபையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியை தலைமை தாங்கி கலந்துகொள்கிறார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சில யோகாசனங்களையும் செய்வார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை முடித்து நாளை வாஷிங்டன் செல்கிறார்.மேலும் வாசிக்க..




  • பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பு




அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு மஸ்க், தான் மோடியின் ரசிகர் என்று தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து பேசிய அவர், “ பிரதமர் மோடி உண்மையிலேயே இந்தியாவிற்கு சரியான விஷயங்களைச் செய்ய விரும்புகிறார் என்று என்னால் சொல்ல முடியும். அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார், புதிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார், மேலும் அது இந்தியாவின் சாதகமாக இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறார். அடுத்த ஆண்டு மீண்டும் இந்தியாவிற்கு வருகை தர, நான் தற்காலிகமாகத் திட்டமிட்டுள்ளேன். அதற்காகவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஸ்டார்லிங்கை இண்டர்நெட்டை இந்தியாவிற்கும் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். இதன்மூலம், இந்தியாவில் உள்ள தொலைதூர மற்றும் கிராமப்புற கிராமங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் ” என தெரிவித்தார். மேலும் வாசிக்க.



  • பற்றி எரியும் மணிப்பூர்... பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா முதலமைச்சர்..? நடப்பது என்ன?


மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி?


மற்ற நடவடிக்கைகள் எதுவும் பயன் தரவில்லை என்றால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை எனக் கூறப்படுகிறது. மாநில நிர்வாகமும் பாதுகாப்பு படைகளும் பாரபட்சத்துடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறது.


குகி பழங்குடி சமூக மக்கள் மீது மாநில காவல்துறை திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக அச்சமூகத்தை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால் பாஜக அரசு மீது அக்கட்சியை சேர்ந்த குகி பழங்குடி சமூக எம்எல்ஏக்களே புகார் அளித்திருப்பதுதான்.மேலும் வாசிக்க..



  • சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. 


கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற  சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதேபோல் சிங்கப்பூர், மலேசியா, நேபாளம்  போன்ற நாடுகளிலும் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை கோயில் நடையானது ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பில் இருந்து சில நாட்களும், கார்த்திகை, மார்கழி மாதங்கள் முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். 


இந்த கோயிலும் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற வயதினரும் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி சுமந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இப்படியான நிலையில் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..


வானிலை நிலவரம்:


தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் வாசிக்க..