தமிழ்நாடு:
- தமிழகத்தில் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. ஊழல் இல்லாத ஆட்சி கொடுப்போம் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
- பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பீகார் துணைமுதல்வர் பங்கேற்பு
- கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் உயர்வு; சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை தொடக்கம்
- வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி - தமிழ்நாட்டில் சில இடங்களில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
- ஆருத்ரா மோசடி வழக்கில் 50 பக்க குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்
- மக்கள் நலன் கருதி 5 சதவீத சாலை வரி உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
- நடுக்கடலில் பழுதான படகில் தவித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
- அமலாக்கத்துறை விசாரணையை செந்தில் பாலாஜி தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் பேச்சு
- சென்னையில் ஜூன் மாத மழை இயல்பை விட 295 சதவீதம் அதிகம் - சென்னை வானிலை மையம் தகவல்
இந்தியா:
- அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார் - உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்
- திருமணத்திற்கு பின்பு உடலுறவை மறுப்பது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமாகாது - கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு
- கலப்பட மருந்து தயாரிப்பதாக சந்தேகத்தின் பேரில் 71 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
- சபரிமலையில் விரைவில் விமான நிலையம் - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது
- மணிப்பூர் இனக்கலவரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்
- சிக்கிமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு - 300 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு
- இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி ஆப் நிறுவனமாக பைஜூஸில் மேலும் ஆயிரம் பேர் பணி நீக்கம்
உலகம்:
- அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியுடன் ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க் சந்திப்பு
- ஹோண்டுராஸ் நாட்டில் மகளிர் சிறையில் வன்முறை - 41 கைதிகள் மரணம்
- சர்வதேச யோகா தினம் - ஐ.நா.சபை தலைமையகத்தில் நடக்கிற யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
- நியூசிலாந்து-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடக்கம்
- பாகிஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்க சீனா ஒப்புதல்
- அமெரிக்காவில் அடிமைத்தன ஒழிப்பு தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு - 6 பேர் படுகாயம்
விளையாட்டு:
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு
- ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
- பெங்களூருவில் இன்று தொடங்குகிறது தெற்காசிய கால்பந்து தொடர்: முதல் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்
- டிஎன்பிஎல் தொடரில் நெல்லை அணியை வீழ்த்தி திருப்பூர் அணி அபார வெற்றி