• மாணவிகளை ஹிஜாப் அணிய வற்புறுத்தியதா பள்ளி நிர்வாகம்? பேனரால் வெடித்த சர்ச்சை..! பின்னணி என்ன?


மத்தியப்பிரதேசத்தில் தனியார் பள்ளி ஒன்று மாணவர்களை ஹிஜாப் அணிய வற்புறுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய அமைப்பால் நடத்தப்படும் இந்த பள்ளியில் புகாரை தொடர்ந்து  மாவட்ட கல்வி அதிகாரி, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு விசாரணை நடத்தினர். ர்ச்சை எழுந்ததால் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த பேனர் அகற்றப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • தொடரும் பெயர் மாற்றும் படலம்...மற்றொரு நகரத்தின் பெயரும் மாற்றம்.. முதலமைச்சர் ஷிண்டே அறிவிப்பு..!


கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே, பல பாரம்பரிய நினைவு சின்னங்கள், இடங்களுக்கு வேறு பெயர்கள் சூட்டப்பட்டு  வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகருக்கு அகல்யாநகர் என பெயர் மாற்ற வேண்டும் என துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து அகமதுநகருக்கு அகல்யாநகர் என பெயர் மாற்றப்படும் என முதலமைச்சர் ஷிண்டே அறிவித்துள்ளார். மேலும் படிக்க



  • மகளை 25 முறை கத்தியால் குத்திய தந்தை..! இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!


குஜராத் மாநிலம் சூரத்தின் கடோதரா என்ற பகுதியைச் சேர்ந்த ராமானுஜா சாஹூ என்பவருக்கும், அவரது மனைவிக்கும் மொட்டை மாடியில் தூங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்த நிலையில், கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராமானுஜா, மனைவி ரேகாவை சுமார் 10 முறை கத்தியால் குத்தியுள்ளார். அவரை தடுக்க முயன்ற 17 வயது மகளுக்கு 25 முறை கத்திக்குத்து விழுந்தது.  மேலும் படிக்க



  • "தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம்" : வீராங்கனைகளுக்கு வேண்டுகோள் விடுத்த மத்திய அமைச்சர்..!


இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே டெல்லி காவல்துறை தங்களின் விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மேலும் படிக்க



  • ஓடிடி தளங்களுக்கான புதிய விதிகள்... மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிரடி!


புகைப்பிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் வாசகத்தை வெளியிடாத ஓடிடி தளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வாசகம் வெள்ளை நிற ஸ்கீரீனில், கருப்பு நிற எழுத்திலும் தோன்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க