Crime: டெல்லியில் 16 வயது சிறுமி 20 முறை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியே தணியாத சூழலில், தற்போது அதைவிட கொடூர சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.


குடும்பத் தகராறு


குஜராத் மாநிலம் சூரத்தின் கடோதரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராமானுஜா சாஹூ. இவரது மனைவி ரேகா (40). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் சத்யா நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மே 18ஆம் தேதி இவர்கள் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு 11.30  மணியளவில் தூங்கச் சென்றனர். அப்போது வீடு அனலாக இருப்பதால் மனைவி ரேகா மொட்டை மாடியில் தூங்கலாம் என்று கூறியுள்ளனர்.


இதற்கு அவர் சம்மத்திக்காததால் இருவர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்த நிலையில், கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் கணவர் ராமானுஜா, மனைவி ரேகாவை தாக்க முன்வந்தார்.


25 முறை கத்தியால் குத்திய கொடூரம்...


அப்போது, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி ரேகாவை சரமாரியாக குத்தியுள்ளார். சுமார் 10 முறை மனைவி ரேகாவை குத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, மனைவி கை விரல்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். குழந்தைகள் முன்பே இதுபோன்ற தந்தை நடத்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் அந்த இரண்டு குழந்தைகள் தந்தை ராமானுஜாவை தடுக்க முயன்றனர்.






அப்போது அவரது மகனை கீழே தள்ளிவிட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அந்த 17 வயது சிறுமியும் தடுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த 17 வயது சிறுமியை வீட்டிற்கு வெளியில் இருந்து உள்ளே தரதரவென இழுத்து சென்று, சுமார் 25 முறை இரக்கமில்லால் குத்தி உள்ளார். 


கைது


இதனை அடுத்து, இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று பேரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமனுஜாவை கைது செய்தனர். 


இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர வைத்துள்ளது. டெல்லியில் 16 வயது சிறுமி 20 முறை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியே தணியாத சூழலில், தற்போது ஒரு சம்பவம் குஜராத்தில் அரங்கேறியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.