• ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வுக்கு தடையா? உண்மை என்ன?




காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி(Rahul Gandhi) அவதூறாக பேசியதாக கூறிய வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்த நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உள்ளிட்ட குஜராத்தின் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் 68 பேரின் பதவி உயர்வை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டதாக வெளியிடப்பட்டது தவறான செய்தி என தீர்ப்பை வழங்கிய நீதிபதி எம்.ஆர். ஷா தற்போது விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க




  • தடம் புரண்ட பெங்களூரு - சென்னை டபுள் டெக்கர் ரயில் - பயணிகள் கதி என்ன?




சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள் டெக்கர் ரயில், விசாநத்தம் ரயில் நிலையத்தில் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்துக்கான காரணம் மற்றும் உயிர் சேதம் குறித்த தகவல்கள் கிடைக்காத நிலையில், விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பயணிகளுக்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • “டெல்லி போகல... எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன்” - டி.கே. சிவகுமார் சொன்னது என்ன?


கர்நாடக முதலமைச்சர் யார் என்பது இன்று அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. யார் அடுத்த முதலமைச்சர் என்ற முடிவை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் பதவி குறித்து மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்பேன் என மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.ஷிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • போதையில் விமானத்தில் ரகளை.. பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயணி...!


ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த சனிக்கிழமை பஞ்சாப்  நகரின் அமிர்தசரஸ் நோக்கி விமானம் சென்றுக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணித்த நபர் ஒருவர் மதுபோதையில் இருந்துள்ளார்.  அவர் விமான பணிப்பெண்ணிடம் தண்ணீர் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் அந்த நபரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க