• இன்னும் 7 நாட்கள் தான்.. நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 3.. தூரத்தை குறைக்கும் பணிகள் தீவிரம்..!


சந்திரயான் 3 விண்கலம் இன்று 4 வது முறையாக நிலவு சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக, 40 நாட்கள் பயணம் செய்து  ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வெற்றிகரமாக நிகழ்ந்தால், சந்திரயான் 3 நிலவின் அதன் ஆராய்ச்சி தொடங்கி தரவுகளை வழங்கும். மேலும் படிக்க



  • டி.எம்.சௌந்திரராஜன் சிலையை திறந்து வைக்கும் முதலமைச்சர்.. இன்று மதுரை பயணம்..!


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக  இன்று  மாலை தலைநகர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ டி.எம். சௌந்தரராஜன் நூற்றாண்டை போற்றும் வகையில் அவரது சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் திறந்து வைக்கிறார். மேலும் படிக்க



  • சிம்லா நிலச்சரிவில் சிக்கிய 4 வீடுகள்... 2 பேர் உயிரிழப்பு.. மீட்பு பணி தீவிரம்!


ஹிமாலச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா நகரில் கிருஷ்ணா நகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மாலை 5.30 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5-10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அம்மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • இன்று ஆடி அமாவாசை .. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்..! 


ஆடி அமாவாசை தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் முக்கிய நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டு வருகின்றனர்.இதற்காக மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. இன்று சிறப்பு வாய்ந்த நாள் என்பதால் ராமேஸ்வரம், பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் பல மாநில மக்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்துள்ளனர். மேலும் படிக்க



  • சாதனையோடு கம்பேக் கொடுத்த பும்ரா..! என்னனு தெரியுமா? 


அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்டத் தொடரில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள பும்ரா, இந்த தொடரில் இந்திய அணியை வழிநடத்துகிறார். இதன்மூலம் இந்திய அணியை டி20 போட்டியில் வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் தனதாக்குகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் செயல்படுகிறார். மேலும் படிக்க