- பா.ஜ.க வின் பழிவாங்கும் செயல்.. தலைமை செயலகத்தில் நடந்த ரெய்டுக்கு எதிராக கொதித்தெழுந்த தேசிய கட்சிகள்..
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக மீதான பாஜகவின் அரசியல் பழிவாங்கலை கண்டிக்கிறேன். விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்கிறது. தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ED சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவை பாஜகவின் பழிவாங்கும் செயல்கள்” என பதிவிட்டு இருந்தார்... மேலும் படிக்க..
- காசி – ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி.. 10 க்கு இலக்கு, பாஜக போடும் கணக்கு.. அதிமுக நிலை என்ன?
பாஜக தலைமையிடம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் 10 தொகுதிகளை குறிவைத்துள்ளதகாவும், அங்கு ஏற்கனவே தேர்தல் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது... மேலும் படிக்க..
- நாளை கரையை கடக்கும் பிபர்ஜாய் புயல்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.. புயல் நிலவரம் இதோ..
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் “பிப்பர்ஜாய், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து தென்மேற்கே சுமார் 280 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) தென்மேற்கே சுமார் 310 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் 13.06.2023 இரவு வரை, வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் 15.06.2023 அன்று மாலை, மிக தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)-மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும். .. மேலும் படிக்க..
- தாயை கொலை செய்து சூட்கேஸில் வைத்து, போலீஸ் ஸ்டேஷன் எடுத்துச்சென்ற மகள்.. நடந்தது என்ன?
பெங்களூரில் பெண் ஒருவர் தாயாருடன் ஏற்பட்ட சண்டையில், தாயை கொன்று உடலை சூட்கேசில் காவல் நிலையம் கொண்டு சென்றார்.. மேலும் படிக்க..
- இந்தி திணிப்பா.. மன்னிப்பு கோரியது நியூ அஸ்யூரன்ஸ் நிறுவனம்..
மொழி விவகாரத்தில் கண்டனங்கள் குவிந்ததை தொடர்ந்து, நியூ அஷ்யூரன்ஸ் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மன்னிப்பு கோரியுள்ளது... மேலும் படிக்க..
- காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் லிலோதியாவின் மனைவி கார் விபத்தில் உயிரிழப்பு..ஓட்டுநரை வலைவீசிப்பிடித்த காவல் துறையினர்…
அதிகாலையில் வடக்கு டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் வேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில், காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் லிலோதியாவின் மனைவி உயிரிழந்தார்... மேலும் படிக்க..
- ரெய்டு வரும்... டிவிட்டரை இழுத்து மூடுவோம் மிரட்டியது இந்திய அரசு..
விவசாயிகள் போராட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டிவிட்டர் நிறுவனத்தை இழுத்து மூடுவோம் என, இந்திய அரசு மிரட்டியதாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.. மேலும் படிக்க..