இன்று (செவ்வாய் கிழமை) அதிகாலையில் வடக்கு டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் வேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில், காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் லிலோதியாவின் மனைவி உயிரிழந்தார்.


காங்கிரஸ் தலைவர் மனைவி விபத்தில் பலி


காவல்துறை துணை ஆணையர் (வடக்கு) சாகர் சிங் கல்சி கூறுகையில், விபத்து தொடர்பாக காஷ்மீர் கேட் காவல் நிலையத்தில் பிசிஆர் அழைப்பு வந்தது. அந்த இடத்தை அடைந்ததும், போலீஸ் குழு விபத்துக்குள்ளான காரை கண்டுள்ளனர். அவர்கள் செல்வதற்கு முன்னரே CAT ஆம்புலன்ஸ் மூலம் ராஜேஷ் லிலோதியாவின் மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார்.



வாகன ஓட்டுநர் கைது


ஆனந்த் பர்வத்தில் வசிக்கும் ராஜேஷ் லிலோதியாவின் மனைவி, 55 வயதாகும், மது ராஜேஷ் லிலோதியா, காலை 6.03 மணியளவில் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக கல்சி கூறினார். தொழில்நுட்பக் கண்காணிப்பின் அடிப்படையில், சீலம்பூர் பகுதியில் குற்றவாளி மற்றும் அவருடன் விதிகளை மீறிய வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்: Ganguly On IPL: ”ஐபிஎல் தான் பெருசு, அத கோலி தான் சொல்லனும்” - கங்குலியின் கருத்துக்கு கொதிக்கும் நெட்டிசன்கள்


வழக்குப்பதிவு 


விசாரணையின் போது, இறந்தவர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ராஜேஷ் லிலோதியாவின் மனைவி என்பது தெரிய வந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 279 (அடிப்படையில் வாகனம் ஓட்டுதல் அல்லது பொது வழியில் வாகனம் ஓட்டுதல்) மற்றும் 304 ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் காஷ்மீர் கேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.






குழு அமைத்து தேடிய காவல்துறை


"விபத்து செய்த வாகனம் பற்றி எந்த துப்பும் இல்லாததால் இது விவரங்கள் இல்லாத விபத்து வழக்காக உள்ளது. அதனை கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பணி கொடுக்கப்பட்டு, தேடப்பட்டது. ஏதேனும் துப்பு கண்டுபிடிக்க, உள்ளூர் ஆதாரங்களும் பயன்படுத்தப்பட்டன. முக்கிய புள்ளியின் மனைவி என்பதால் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஆனந்த் பர்வத்தில் இருந்து ஷஹாத்ரா மேம்பாலம் வரை எதாவது துப்பு கிடைக்குமா என்று கண்டறிய சிசிடிவி கேமராக்கள் ஆராயப் பட்டன. இதன்மூலம் மோதிய வாகனம் மாருதி பிரீசா என்று கண்டறியப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார். ஜெய்னுல் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் விபத்து வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும் விபத்து காலை நேரத்தில் நடந்ததாகக் கூறினார். அதோடு அவர் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக அவர் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.