மேற்கு வங்கத்தை சேர்ந்த  39 வயதாகும் செனாலி சென் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபிஸ்ட் எனக் கூறப்படுகிறது.  இப்பெண் தனது கணவர், மாமியார் மற்றும் தாயுடன் அப்பார்ட்மெண்டில்  வசித்து வருகிறார். செனாலியின் அம்மாவிற்கும் மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்ளுவேன் என்று செனாலியின் தாயார் கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த செனாலி  தனது தாயாருக்கு வலுக்கட்டாயமாக தூக்க மாத்திரைகளை கொடுத்துள்ளார். பின் தாயாரை கொன்று உடலை சூட்கேசில் அடைத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு போலீசார் சூட்கேசை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.


விசாரணையில் அப்பெண், தூக்க மாத்திரைகளை ஊட்டிவிட்டு துப்பட்டாவால் கழுத்தை நெறித்து தாயை கொன்றதாகக் கூறியுள்ளார். மேலும், கொலை நடைபெற்றபோது, அந்த பெண்ணின் மாமியார் பக்கத்து அறையில் இருந்துள்ளார்.அவருக்கு தெரியாத வகையில் இவர் தாயை கொலை செய்து சூட்கேசில் மறைத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து அப்பெண்ணிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


முன்னதாக, மத்திய மும்பையில் உள்ள  லால்பாக் பகுதியில்  வீணா என்ற பெண்ணை கடந்த 3 மாதங்களாக காணவில்லை என கூறி அவரது சகோதரர் கலாசௌகி காவல்துறையினரிடம் புகார்  அளித்தார். விசாரணையில் வீணாவின் மகளான 24 வயது பெண் ரிம்பிள் ஜெயின் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தார். 


இதனால் சந்தேகமடைந்த போலீசார் வீட்டை சோதனை செய்தனர். முதலில் ஒரு தொட்டியில் கை மற்றும் கால்களை கண்டனர். பின்னர் அப்பெண்ணை கைது செய்தனர்.  ரிம்பிள் ஜெயின் இருந்த வீட்டை சோதனை செய்ததில்  வீணாவின் உடல் துண்டு துண்டாக வெட்டி அலமாரியில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 


ரிம்பிள் ஜெயினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தனது தாயுடன் ஏற்பட்ட தகராறில் ரிம்பிள் கொலை செய்துள்ளார் என்றும், வீணாவின் உடலை கத்தி, மின்சார அறுவை இயந்திரம் உள்ளிட்டவை கொண்டு வெட்டியதும் தெரிய வந்துள்ளது. வீட்டினுள் துர்நாற்றம் வீசாமல் இருக்க 200 -க்கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் மற்றும் ஏர் ஃப்ரெஷனர்களைப் ரிம்பிள் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது.


ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும் போது அக்கம் பக்கத்தினர் துர்நாற்றம் பற்றி புகார் தெரிவிக்க, அருகிலிருந்த மருந்தகத்தில் இருந்து பெறப்பட்ட வாசனை திரவியத்தை வீடு முழுவதும் தெளித்துள்ளார் ரிம்பிள்.


மேலும் படிக்க 


C.V. Shanmugam on Annamalai: மாமூல் வாங்கியவர் அண்ணாமலை; விருப்பம் இல்லை என்றால் வெளியேறுங்கள்.. கடுமையாக சாடிய சி.வி. சண்முகம்


Twitter Former CEO: ”ரெய்டு வரும், டிவிட்டரை இழுத்து மூடுவோம் என மிரட்டியது இந்திய அரசு” - டிவிட்டர் முன்னாள் சிஇஒ