• சமூக நீதியை உறுதி செய்ய,  தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது அரசு.. பிரதமர் மோடி பேச்சு..


கடந்த 1998ஆம் ஆண்டு, அடல் பிகாரி வாஜ்பாய், பிரதமராக பொறுப்பு வகித்தபோது, பொக்ரான் அணுகுண்டு சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. இந்திய அறிவியல் வரலாற்றில் பொக்ரான் அணுகுண்டு சோதனை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


இந்த நாளை நினைவுகூரும் விதமாக தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பொக்ரான் அணுகுண்டு சோதனையை புகழ்ந்து பேசினார். மேலும் படிக்க..



  • டிமிக்கி கொடுத்த நவீன் பட்நாயக்.. எதிர்கட்சிகளுக்கு பின்னடைவு.. தேசிய அரசியலில் ட்விஸ்ட்..


மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதற்கிடையே, முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை அளித்துள்ளது. வரும் தேர்தலில் தன்னுடைய கட்சி தனித்து போட்டியிடும் என்றும் இதுவே தன்னுடைய திட்டம் என்றும் ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும் படிக்க..



  • தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படுமா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்போது?


தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஆனால், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மறுத்து வருகிறது. மேலும் படிக்க..



  • ”ஆளுநரின் அதிகாரம் அவ்வளவு தான்” -  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மாநில அரசுகள் மகிழ்ச்சி..


டெல்லி அரசுக்கும் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்த நிலையில், அதை தீர்க்கும் வகையில் வழக்கு தொடரப்படட்டது. அதாவது, ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கு, துணை நிலை ஆளுநருக்கும் பிரச்னை நீடித்து வந்தது.


இந்த சட்ட போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுக்கு மிக பெரிய வெற்றி கிடைத்துள்ளது. மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் படிக்க..



  • ’மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததில் தலையிட முடியாது’ – உச்சநீதிமன்றம் அதிரடி


உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்ததால் மீண்டும் மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சி அமைத்தது. மேலும் படிக்க..



  • விமான பயணிகளே திவால் ஆகிறதா ஸ்பைஸ்ஜெட்.. நிறுவனம் கொடுத்த விளக்கம் இதுதான்..


கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் சிக்கித் தவித்து வரும் இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திவால் நடைமுறைகளை மேற்கொள்ள உள்ளதாக வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேலும் படிக்க..