• கர்நாடகாவில் வாக்களிக்க வந்தபோது வாக்குச்சாவடியில் குழந்தை பெற்ற பெண்!


கர்நாடகா மாநிலத்தில் வாக்குப்பதிவு செய்ய வந்த 23 பெண் ஒருவருக்கு வாக்குச்சாவடியில் குழந்தை பிறந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


கர்நாடகா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. கர்நாடகா பல்லாரி தொகுதியில் குர்லகிண்டி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு 23 வயது பெண் ஒருவர் வந்துள்ளார். வாக்களிக்க வந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு வாக்குச் சாவடியிலேயே குழந்தை பிறந்துள்ளது. வாக்குச்சாவடியில் இருந்த பெண் வாக்காளர்களும், பெண் அதிகாரிகளும் அந்த பெண்ணின் பிரசவத்திற்கு உதவி செய்துள்ளனர். மேலும் படிக்க



  • நடிகர் சல்மான்கானுக்கு மிரட்டல் விடுத்தவர் மருத்துவ மாணவர்: போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு லண்டனில் படிக்கும் மருத்துவ மாணவர் ஒருவர் இமெயிலில் மிரட்டல் விடுத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் மருத்துவப் படிப்புக்காக லண்டன் சென்றுள்ளதாகவும், தற்போது அவர் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நடிகர் சல்மான் கானுக்கு அந்த மாணவர் தொடர்ந்து மிரட்டல் இமெயில்களை அனுப்பி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். தற்போது அந்த மாணவரை இந்தியா அழைத்து வரும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இவ்வருட இறுதியில் அவரின் மருத்துவ படிப்பு முடிவடைவதால், அவர் இந்தியா திரும்பக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க



  • 146 இடங்கள்...சொல்லி அடிக்கும் காங்கிரஸ்.. கணித்து சொல்லும் டி.கே. சிவக்குமார்..!


ஏபிபி - சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 100 முதல் 112 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக, 83 முதல் 95 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், 21 முதல் 29 தொகுதிகள் வரை பெற்றலாம் என கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து கருத்து பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், 146 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் வெற்றிபெறும் என கூறியுள்ளார். மேலும் படிக்க



  • கர்நாடகாவில் காங்கிரஸா? பாஜகவா? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் குழப்பம்...!


புகழ்பெற்ற ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ் 100 முதல் 112 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக, 83 முதல் 95 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், 21 முதல் 29 தொகுதிகள் வரை பெற்றலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்க