பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு லண்டனில் படிக்கும் மருத்துவ மாணவர் ஒருவர் இமெயிலில் மிரட்டல் விடுத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் மருத்துவப் படிப்புக்காக லண்டன் சென்றுள்ளதாகவும், தற்போது அவர் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நடிகர் சல்மான் கானுக்கு அந்த மாணவர் தொடர்ந்து மிரட்டல் இமெயில்களை அனுப்பி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். தற்போது அந்த மாணவரை இந்தியா அழைத்து வரும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இவ்வருட இறுதியில் அவரின் மருத்துவ படிப்பு முடிவடைவதால், அவர் இந்தியா திரும்பக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் குழுவிலிருக்கும் கோல்டி பிராரை நடிகர் சல்மான் கான் சந்தித்து, பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு கடந்த மார்ச் மாதம் ஒரு மிரட்டல் இமெயில் சல்மான் கானுக்கு வந்தது. அதே போல ‘ராக்கி பாய்’ என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் ரின் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சல்மான் கானை கொல்லப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மைனர் சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.


 இந்தி நடிகர் சல்மான்கான் மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வருகிறார். மும்பை காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த மாதம்  தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தன்னை ராக்கி பாய் என அறிமுகப்படுத்தி கொண்டதுடன், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.


சல்மான்கானின் அலுவலகத்துக்கு கடந்த மார்ச் 18-ந்தேதி ரோகி கார்க் என்பவரிடம் இருந்து இ-மெயில் ஒன்று வந்தது. அந்த இ-மெயிலில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்தது.


அதில், சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியை சல்மான்கான் பார்க்க வேண்டும். கோல்டி பாய்  இந்த பிரச்சனையை முடிக்க சல்மான்கானுடன் நேருக்கு நேர் பேச விரும்புகிறார். இன்னும் நேரம் உள்ளது. நேரம் கடந்தால் நீங்கள் அதிர்ச்சியான ஒரு சம்பவத்தை பார்க்க நேரிடும் என கூறப்பட்டிருந்தது.


இதனை அடுத்து, நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அவரது நடிப்பில் கிஸி கா பாய் கிஸி கா ஜான் என்ற திரைப்படத்தின் வெளியாக இருந்த நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்தது.