தமிழ்நாடு:



  • முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக அண்ணாமலை மீது அவதூறு வழக்கு: சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்

  • வங்கக்கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்தம் தீவிர புயலானது: வங்கதேசம் சிட்டகாங் அருகே 14ம் தேதி கரை கடக்கும்

  • கரும்பு விவசாயிகளிக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்தது நியாயமான சந்தை விலை அல்ல - உயர்நீதிமன்றம் கருத்து

  • மின்வாரிய ஊழியர்களுக்கான 6% ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு

  • தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று புதிய மாற்றம்: அமைச்சராக பதவியேற்கிறார் டி.ஆர்.பி ராஜா

  • சூடானில் இருந்து 270 பேர் தமிழகம் திரும்பி உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

  •  இரு மொழி படித்தால் போதும் மூன்றாவது மொழி தேவையில்லை என அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.

  • கரூரில் அமராவதி ஆறு மாசுபடுவதை குறைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக கூட்டம் நடைபெற்றது. 

  • வேலை வேண்டும் என்று நேரில் கோரிக்கை விடுத்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கு, அமைச்சர் உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பணி ஆணை வழங்கினார். 

  • தொகுதி வாரியாக மாணவ மற்றும் மாணவிகளின் மதிப்பெண்கள் பட்டியலை தயார் செய்ய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவு

  • ஆளுநர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அண்ணன் துரைமுருகன் சொல்ல முடியாது - ஆளுநர் தமிழிசை


இந்தியா:



  • ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் நடந்தது; கர்நாடகாவில் 75% வாக்குப்பதிவு

  • அதானி குழுமத்தில் நடந்த மோசடி என்ன..?உச்ச நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல் - நாளை விசாரணை

  • வெள்ளி மாளிகையில் விருந்து; ஜூன் 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

  • ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லை - அசோக் கெலாட் முன்னிலையில் பிரதமர் மோடி விமர்சனம்

  • உத்தர பிரதேசம், ஒடிசா, மேகாலயாவில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

  • தேனி எம்.பி ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அவரை அதிமுக என அங்கீகரிக்க கூடாது என அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  • மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.


உலகம்: 



  • ரூ.5,500 கோடி ஊழல் வழக்கில் கைதான இம்ரான் கானை 8 நாள் காவலில் விசாரிக்க அனுமதி : பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • வாட்ஸ் ஆப்பை நம்ப முடியாது என்ற எலான் மஸ்க்கின் கருத்துக்கு மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் மறுப்பு தெரிவித்துள்ளது.

  • மலேசியாவின் சபா மாநிலத்தில் நீருக்கடியில் சீன பெண் சுற்றுலாப் பயணியை முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

  • இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்திய துப்பாக்கி சூட்டில், 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

  • டோங்காவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது; சுனாமி எச்சரிக்கை இல்லை

  • அமெரிக்காவுக்கு வருகிற ஜூன் 22-ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் பைடன் விருந்தளிக்கிறார்.

  • ட்விட்டரில் வீடியோ கால், ஆடியோ கால் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது.


விளையாட்டு: 



  • சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்பட தயாரிப்பாளர் மற்றும் யானை பராமரிப்பு தம்பதி பொம்மன் - பெள்ளி  தம்பதி உள்ளிட்ட படக்குழுவினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற உள்ளது. 

  • ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.