கர்நாடகா மாநிலத்தில் வாக்குப்பதிவு செய்ய வந்த 23 பெண் ஒருவருக்கு வாக்குச்சாவடியில் குழந்தை பிறந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


கர்நாடகா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. கர்நாடகா பல்லாரி தொகுதியில் குர்லகிண்டி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு 23 வயது பெண் ஒருவர் வந்துள்ளார். வாக்களிக்க வந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு வாக்குச் சாவடியிலேயே குழந்தை பிறந்துள்ளது. வாக்குச்சாவடியில் இருந்த பெண் வாக்காளர்களும், பெண் அதிகாரிகளும் அந்த பெண்ணின் பிரசவத்திற்கு உதவி செய்துள்ளனர்.


அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த கர்நாடக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. காலை முதலே வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி, 65.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கிராமப்புறங்களில், மக்கள் எப்போதும் போல ஆர்வத்துடன் வாக்களித்த போதிலும் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாகி இருக்கிறது. யஷ்வந்த்பூர் தொகுதியில் அதிகபட்ச வாக்கு சதவிகிதம் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வரும் 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  


கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த முறை ஆட்சியை பிடிக்கப்போவது யார் என தீவிரம் காட்டி வருகின்றனர்.


இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ் 100 முதல் 112 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக, 83 முதல் 95 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், 21 முதல் 29 தொகுதிகள் வரை பெற்றலாம் என கூறப்பட்டுள்ளது.


மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம், கடந்த தேர்தலில் 18 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது. இந்த முறை, 14.3 சதவிகித வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பு முடிவுகளில், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பெரும்பான்மைக்கு தேவைப்படும் எண்ணிக்கையை விட ஒரு தொகுதி குறைவாக காங்கிரஸ் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Points Table IPL 2023: டெல்லிக்கு எதிராக வெற்றி... புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு தாவியதா சென்னை? பாயிண்ட்ஸ் டேபிள் டாப் யார்?


Cucumber Bitterness : வெள்ளரிக்காய் கசப்பு ஏறிப்போகுதா? எப்படி கசப்பை நீக்கலாம்.. இதோ டிப்ஸ்..