• பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா..? மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில்..!


கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல், பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. இதனிடையே பிரதமராக மோடி பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அடுத்த காலாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கும் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • ஒசாமா பின்லேடனை போல தாடி வளர்க்கும் ராகுல் காந்தி... சர்ச்சையை கிளப்பிய பீகார் பாஜக தலைவர்..!


பாஜக தலைவர்கள், சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், பிகார் மாநில பாஜக தலைவர் சாம்ராட் சௌத்ரி, ராகுல் காந்தியை கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுன் ஒப்பிட்டு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒசாமைப் போல தாடி வளர்த்து, பிரதமர் நரேந்திர மோடியைப் போல மாற நினைக்கிறார் என தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  மேலும் படிக்க



  • ஆசிய போட்டிகளில் பங்கேற்க மாட்டோம்- அடுத்த அதிரடிக்கு தயாராகும் மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்...!


பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆசிய போட்டிகளில் விளையாட மாட்டோம் என மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார்.   ஒவ்வொரு நாளும் நாங்கள் மனதளவில் என்ன எதிர்கொள்கிறோம் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க



  • வீராங்கனையை தொட கூடாத இடத்தில் தொட்டார்" - பிரிஜ் பூஷன் சிங் குறித்து ரெப்ரீ பரபரப்பு வாக்குமூலம்..!


பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் குறித்து சர்வதேச மல்யுத்த நடுவர் இன்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். வீராங்கனைகள் மீதான அத்துமீறலை தான் நேரில் பார்த்தேன்.  பிரிஜ் பூஷன் சிங்கும் அவரது உதவியாளர்களும் குடிபோதையில் மல்யுத்த வீரர்களை தகாத முறையில் தொடவும், வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கவும் செய்தனர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • இனி ஸ்மார்ட் வாட்சுகளும் ’நோ’ ’நோ’.. லோகோ பைலட்டுக்கு பறந்த அதிரடி உத்தரவு.. ஏன் தெரியுமா.?


பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் லோகோ பைலட்கள் பணியின்போது ‘ஸ்மார்ட் வாட்ச்’ அணிய இந்திய ரயில்வே வாரியம் தடை விதித்துள்ளது. ஷாலிமார்- சென்னை கோடமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் தரம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  288 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும் கூறப்பட்டது. இந்த மிகப்பெரிய பேரழிவுக்கு பிறகு இந்த நடவடிக்கையை இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது. மேலும் படிக்க