• கர்நாடக மக்கள் ஆதரவு யாருக்கு?.. 7 மணிக்கு தொடங்கியது வாக்குப்பதிவு.. காங்., - பாஜக இடையே நேரடி மோதல்



கர்நாடகவில் ஒரே கட்டமாக நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு ஆட்சியை பிடிப்பதற்கு தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடியாக கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் படிக்க



  • "ஓட்டுபோட வாங்க.. ஓசியில சாப்பிட்டு போங்க.." ஆஃபர் கொடுத்த ஹோட்டல்..! கர்நாடகாவில் நடந்தது என்ன?


பெங்களூரில் சட்டசபை தேர்தல்களில் வாக்கு செலுத்துபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, வாக்காளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் வாக்கு செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு உணவகங்கள் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் படிக்க



  • ஷ்ரத்தா கொலை வழக்கு.... காதலன் அஃப்தாப் மீது கொலை வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு...


ஸ்ரத்தா கொலை வழக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அஃப்தாப் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும்,  அடையங்களை மறைக்க முயற்சி செய்த பிரிவின் கீழ் வழக்கு பதியவும் உத்தரவிட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளை காதலன் அப்தாப் மறுத்த நிலையில் விசாரணை ஜூன் 1-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • மீண்டும் 5 சிவிங்கிப் புலிகள் வனப்பகுதிக்குள் விடப்படும்.. தகவலை வெளியிட்ட சுற்றுச்சூழல் அமைச்சகம்!


மத்திய பிரேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவின் பாதுகப்பட்ட பகுதியிலிருந்து  ஐந்து சிவிங்கிப் புலிகளை வனப் பகுதிக்குள் திறந்துவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.


வரும் ஜூன் மாத மழை காலத்திற்குள் நமீபியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மேலும் 5 சிவிங்கிப் புலிகளை வனப்பகுதிக்குள் திறந்துவிட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக, அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை: மருமகளை விஷம் வைத்து கொன்ற மாமியார்? என்ன நடந்தது?


உத்தர பிரதேச மாநிலத்தில் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்காததால்,  மருமகளை மாமியார் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




உத்தரப்பிரதேசம் மாநிலம், கவுசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாலி பேகம். இவருக்கு 33 வயதாகிறது. இவருக்கும் ஃபிரோஸ் அகமதுவிற்கும் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மருமகள் சாலிபேகத்திற்கும், அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க