• சைக்கிள் பேரணி.. கொட்டும் மழையில் காரில் சென்ற பிரதமர் மோடி.. பார்ப்பதற்காக திரண்ட மக்கள்..


தெலங்கானா மாநிலத்தில் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி, தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு சென்ற பிரதமர் மோடி உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் ராஜஸ்தான் மாநிலம் பிகானேருக்கு சென்றுள்ள மோடி, கொட்டும் மழையில் காரில் சாலை பேரணி மேற்கொண்டார். அவருடன் சைக்கிளில் சிலரும் பேரணி மேற்கொண்டனர். இதை, பார்க்க வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்தனர். பின்னர், பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பேசினார்.மேலும் படிக்க



  • ஃபார்முலா வகுத்த கார்கே..சச்சின் பைலட் எடுத்த முக்கிய முடிவு..ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு..


ராஜஸ்தானில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், இந்த முறை ஆட்சியை தக்க வைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே நிலவும் அதிகார போட்டி நிலவி வருகிறது. இதனிடையே  வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ஒற்றுமையுடன் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.மேலும் படிக்க



  • அடிச்சது ஜாக்பாட்..ரயில்களில் ஏசி இருக்கை வகுப்பு கட்டணம் குறைப்பு..ரயில்வே அதிரடி அறிவிப்பு


ரயில்களில் தங்கும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏசி இருக்கை வசதி கொண்ட ரயில்களில் கட்டண குறைப்பை அமல்படுத்துவதற்கான அதிகாரம் மண்டல் ரயில்வேதுறைக்கு வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை வகுப்பு கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் படிக்க




  • தெலங்கானாவை புகழ்ந்து தள்ளும் பிரதமர் மோடி.. தேர்தலை குறிவைத்து வேலை செய்யும் பாஜக..




தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர வேறு எங்கும் ஆட்சி அமைக்காத பாஜக, தன்னுடைய அடுத்த குறியை தெலங்கானா மீது வைத்துள்ளது.இந்தாண்டின் இறுதியில், அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில், அங்கு தேர்தல் களம் சூடி பிடித்துள்ளது.  அங்கு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியிருக்கிறது. அதில் தெலங்கானா மக்களின் பங்கு அளப்பரியது என புகழ்ந்துள்ளார். மேலும் படிக்க



  • நான் டயர்டும் ஆகல ரிட்டயர்டும் ஆகல: அஜித் பவார் விமர்சனத்திற்கு சரத் பவார் பதிலடி


மகாராஷ்டிர அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்ட நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவார், கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் ஆகியோருக்கிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில்  "நான் சோர்வாகவும் இல்லை. ஓய்வு பெறவும் இல்லை. என்னை ஓய்வு பெறச் சொல்ல அவர்கள் யார்? என்னால் இன்னும் வேலை செய்ய முடியும்" என சரத் பவார் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க