தமிழ்நாடு:



  • கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் வெளியீடு - மாநிலம் முழுவதும் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

  • பத்திரப்பதிவு தொடர்புடைய சேவைக் கட்டணங்கள்  திருத்தி அமைப்பு - 20 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக விளக்கம்

  • சென்னையில் 176 கண்காட்சி அரங்குகளுடன் வேளாண் வணிக திருவிழா - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பண்ருட்டி விவசாயிக்கு பரிசு தொகை வழங்கினார்

  • தமிழ்நாட்டில் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிய நபர்கள் நியமனம்

  • ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை ராணுவம் - 2 படகுகளையும் பறிமுதல் செய்ததாக தகவல்

  • ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் தகுதி அமைச்சர் ரகுபதிக்கு இல்லை - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளாசல்

  • கீழடி 9ம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு

  • ரவுடிகள் இல்லாத மாநிலமாக தலைநகர் சென்னை மாறும் - மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உறுதி

  • பிறமாநிலங்களில் இளநிலை மருத்துவம் படித்தவர்களை முதுநிலை மருத்துவம் படிக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் - பாமக ராமதாஸ் கோரிக்கை

  • ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் கைது


இந்தியா:



  • மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு - வாக்குப்பதிவு முடிந்த பின்னர் காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு

  • ஜனநாயகத்தை அழிய விடமாட்டோம் - மேற்குவங்க மாநில வன்முறை குறித்து பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கருத்து

  • வந்தேபாரத் ரயில்களை வெள்ளையில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு - தேசிய கொடியில் இருக்கும் நிறம் என அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம்

  • ராஜஸ்தானில் ரூ.24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

  • ஹரியானாவில் விவசாயிகள் உடன் சேர்ந்து  வயலில் நாற்று நட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி - டிராக்டர் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரல்

  • கடனை திருப்பிக் கேட்டதால் கொல்லப்பட்ட ஜெயின் துறவி - உடல் கூறுபோட்டு கிணற்றில் வீசப்பட்டதால் பரபரப்பு


உலகம்:



  • எங்களை காப்பாற்றிய நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா தான் - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் பேச்சு

  • அதிவேக இணைய சேவைக்காக 48 செய்ற்கைகோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

  • மெட்டாவின் த்ரெட்ஸ் செயலி - முதல் நாளிலேயே 4 கோடி பேர் பதிவிறக்கம் செய்து சாதனை

  • அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்  விமான விபத்து - 6 பேர் பலி

  • 500வது நாளை தொட்டும் முடிவடையாத போர் - 9 ஆயிரம் பொதுமக்களை இழந்த உக்ரைன்


விளையாட்டு:



  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி வெற்றி - அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஷ் டெஸ்ட் தொடர் -  இங்கிலாந்து அணி வெற்றி பெற 224 ரன்கள் தேவை

  • உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடர் - இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து இன்று மோதல்

  • டிஎன்பில் - மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி நெல்லை கிங்ஸ் அணி இரண்டாவது எலிமினேட்டர் போட்டிக்கு முன்னேற்றம்