• இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு தாக்குதல் எதிரொலி .. ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..!


இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு  நடத்திய தாக்குதல் எதிரொலியாக ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் இருந்து வாரம்தோறும்  இஸ்ரேலில் உள்ள டெல் அலிவ் நகருக்கு 5 விமானங்கள் சென்று வருகிறது. ஏற்கனவே நேற்று டெல்லியில் இருந்து டெல் அலிவ் நகருக்கு இயக்கப்படவிருந்த AI139 ரக விமானமும், டெல் அலிவ் நகரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படவிருந்த AI140 விமானம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க



  • விண்வெளிக்கு செல்லும் இந்தியர்கள்: பத்திரமாக இறங்குவதற்கு அசத்தல் கருவி.. பக்கா பிளான் போட்ட இஸ்ரோ!


மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், தற்போது இந்த மிஷன் பற்றி முக்கிய அப்டேட்டை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.. அதன்படி, விண்வெளியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், வீரர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் வாகனத்தின் சோதனையை இஸ்ரோ தொடங்கி உள்ளது. விண்வெளிக்கு சென்ற பின்னர் வீரர்கள் மீண்டும் பூமிக்கு பத்திரமாக தரையிறங்கவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது தான் க்ரூ மாட்யூல்  (Crew Model). இதனை தான் விரைவில் சோதித்து பார்க்க இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் படிக்க



  • மழையால் சின்னாபின்னமான சிக்கிம்; சடலமாக கிடந்த 7 ராணுவ வீரர்கள் - 56 பேர் உயிரிழந்த சோகம்!


சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் திடீர் மேகவெடிப்பு காரணமாக தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து, லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் படிக்க



  • நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் மனதார வரவேற்கிறேன் - பெரம்பலூர் எம்.பி. பேட்டி


இந்திய ஜனநாயக கட்சி சார்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 2  தொகுதிகளை கேட்டு பெறுவோம் பெரம்பலூர் எம்.பி. பச்சமுத்து தெரிவித்துள்ளார். இதனிடையே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் மனமார வரவேற்கிறேன். அவரைப் போன்ற இளைஞர்கள் பலர் அரசியலுக்கு வர வேண்டும். பதவிகளில் அமர வேண்டும், தொடர்ந்து மக்கள் பணத்தை கொள்ளை அடிக்காமல், மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் படிக்க



  • ஓசூர் பட்டாசு கடை தீ விபத்தில் 14 பேர் உயிரிழப்பு .. உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு நிவாரணத்தொகை அறிவிப்பு..!


தமிழகம்-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் ஏற்பட்ட பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு  பொது நிவாரண நிதியில் ரூ.3 லட்சம், கடுமையான காயம் ஏற்பட்ட நபர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயத்திற்கு ரூ.50 ஆயிரம் என வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க