Breaking News Live: நாகாலாந்து துப்பாக்கிச் சூடு : ராணுவம் விசாரிக்க உள்ளதாக தகவல்
Breaking News Live Tamil: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள்..!
நாகாலாந்து துப்பாக்கிச் சூடு : ராணுவம் விசாரிக்க உள்ளதாக தகவல்
2008 - 2009-ஆம் ஆண்டு ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. ஜெயலலிதா காலமாகிவிட்டதால் அவ்வழக்கில் தீபா - தீபக்கை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது
நாகாலாந்து துப்பாக்கிச்சூடு குறித்த விவகாரம் தீவிரமானதை அடுத்து, மக்களவையில் வருத்தம் தெரிவித்தார் அமித்ஷா
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவிக்கிறது. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும்- அமைச்சர் அமித் ஷா.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், திருச்சி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
இந்திய-ரஷ்ய வருடாந்திர மாநாட்டை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி சோய்க்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் இன்று சந்திக்கவுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சர்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவது முக்கியமானதாக கருதப்படுகிறது.
ராமேஸ்வரம்: புயல் கூண்டு இறக்கப்பட்டது
நாகலாந்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 19 பொது மக்கள் பலியான விவகாரம் குறித்து மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அரசாணையை ஜனவரி 3 வது வாரத்தில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.
Background
நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று 19 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினர். இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, ராணுவம் மன்னிப்பு கேட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -