Breaking LIVE: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் , எம்எல்ஏக்கள் வருகை
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
சேலம் நெடுஞ்சாலை நகர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி ,ராஜ்யசபா, எம்பி சந்திரசேகர், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் சந்தித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் செங்கோட்டையன் வருவதாக தகவல்.
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்தது செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம்
கடவுளிடமிருந்து ரஷ்யா தப்ப முடியாது. கடவுளின் பார்வையில் இருந்து ஒளிய முடியாது - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி
உக்ரைன் ஆதரவு நிலைப்பாட்டுக்கு நன்றி.. தென்கொரிய அதிபருடன் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பேச்சுவார்த்தை
தங்கள் படைவீரர்களின் உயிர்ச்சேதத்தை தடுக்க, ரஷ்யா வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது
சர்வதேச விண்வெளி ஆய்வு மைய விவகாரத்தில் அமெரிக்கா உடனான உறவுகளைத் துண்டித்தது ரஷ்யா
டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ, எம்பிக்கள், எம்.எம்.அப்துல்லா, கலாநிதி வீராசாமி, திருச்சி சிவா, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நான்கு பேர் கொண்ட குழுவை, உக்ரைனில் தமிழர்களை மீட்கும் குழுவாக அமைத்தது தமிழக அரசு
உக்ரைன் : தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக்குழு அமைத்தது தமிழக அரசு
எஸ் 400 ஏவுகணை தடுப்பை மேற்கொள்வது எப்படி என்பதற்கான பயிற்சியைத் தொடங்கியது ரஷ்யா
நீடிக்கும் யுத்தம் : 8-வது நாள்... உக்ரைனின் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்கி வருகிறது ரஷ்ய படைகள்
தமிழ்நாட்டில் வருகின்ற 6ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
36 வயதே ஆன திருமதி.மகாலட்சுமி யுவராஜ் முதுகலைப் பட்டம் பயின்றவர். இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணி செய்து கொண்டிருந்த இவர், தன் பதவியில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டவர்.
1. ஆஸ்திரேலியாவில் முதுகலை பட்டம் பயின்றவர்.
2. 1998ல் இந்திய ஜப்பான் கூட்டு இளம் தலைவர்கள் கருத்தரங்கில் இந்தியாவிலிருதந்து இளம் மாணவர் தலைவராக பங்கேற்றவர்.
3. 42 வயதான இளம் மேயர்
எளிய பின்னணியை சேர்ந்த பலருக்கு மேயர் மற்றும் துணை மேயர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
இளங்கலை பட்டதாரிகள் - 20
முதுகலை பட்டதாரிகள் - 11
துணை மேயர்
ஆண்கள் - 10
பெண்கள் - 5
மேயர்
ஆண்கள் - 9
பெண்கள் - 11
கோவை மேயர் பதவிக்கு திமுகவை சேர்ந்த கல்பனா போட்டியிடுகிறார். துணை மேயர் பதவிக்கு வெற்றி செல்வன் போட்டியிடுகிறார். கோவை மாநகராட்சி 19 வது வார்டில் வெற்றி பெற்றவர் கல்பனா.
சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக பிரியா ராஜன் போட்டியிடுவதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துணை மேயராக மகேஷ் குமார் போட்டியிடுகிறார்.
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மே துணை மேயர் நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் பின்வருமாறு :
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க ஓபிஎஸ்-சிடம் தேனி நிர்வாகிகள் மனு அளித்தநிலையில் சேலத்தில் ஈபிஎஸ் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுக தொண்டர் நரேஷ்குமாரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்கள் கையெழுத்திட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 352.85 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் மீண்டும் சசிகலா, தினகரன் சேர்க்க தேனி மாவட்ட அதிமுகவினர் வரும் 5ம் தேதி இது குறித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தேனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. அதிமுகவில் மட்டுமல்ல தமிழக அரசியலையே இந்த நிகழ்வு மிகவும் பரபரப்பு உள்ளாக்கி உள்ளது.
இரண்டு முறை கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆறுக்குட்டி
அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும்; டிடிவி தினகரன் வழி நடத்த வேண்டும் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி
இந்தியாவிற்கு எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு திட்டமிட்டபடி வழங்கப்படும் என ரஷ்யா நேற்று அறிவித்தநிலையில், இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 72.50க்கு விற்பனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.38776க்கு விற்பனை
தஞ்சையில் சம்பந்தப்பட்ட பள்ளி விடுதியில் உள்ள மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றவும் பரிந்துரை
உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு மனநல ஆலோசனை மற்றும் நிவாரணம் வழங்க பரிந்துரை
அரியலூர் மாணவி மரணத்துக்கு மதமாற்றம் காரணம் இல்லை - தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,561 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்ககடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணிநேரத்தில் வட தமிழக கடலோரத்தை நோக்கி நகரும் என்று ஐஎம்டி தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது திமுக.
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 119-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.
Background
உத்திரபிரதேசத்தில் இன்று ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் நகரில் தற்போது பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -