News Today LIVE: பெலாரஸில் உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தை...!
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்ற போரில் 5 ஆயிரத்து 300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
பெலாரஸ் நாட்டில் உக்ரைன் - ரஷ்யா நாட்டின் அதிகாரிகள் மத்தியில் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றால் போர் நிறுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
ரஷ்யாவிற்கு எதிரான போரில் சண்டையிட விரும்பினால் உக்ரைன் நாட்டின் சிறையில் உள்ள கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று நேட்டோ அறிவித்துள்ளது. மேலும், ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள், டாங்கி பீரங்கிகள் ஆகியவை வழங்கப்படும் என்று நேட்டோ அறிவித்துள்ளது.
தமிழக மாணவர்களை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை உடனே சேர்க்க வேண்டும் என்றும், ரஷ்ய படைகள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாட்டை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சர்கள் செல்லும் நாடுகளின் விபரம்!
➤ மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா - ருமேனியா&மோல்டாவா
➤மத்திய அமைச்சர் கிரிண் ரிஜிஜு - ஸ்லோவேக்கியா
➤மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி - ஹங்கேரி
➤மத்திய அமைச்சர் வி.கே.சிங் - போலாந்து
இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக, ஹர்தீப் சிங் புரி, கிரண் ரிஜிஜூ, ஜோதிராதித்ய சிந்தியா, வி.கே சிங் ஆகிய நான்கு அமைச்சர்களும் உக்ரைனின் எல்லை நாடுகளுக்கு பயணம்
இந்தியர்களை மீட்க ருமேனியா & மால்டோவா நாடுகளுக்கு செல்கிறார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ரஷ்யாவின் மீதான தொடர்ச்சியான தடைகளால் 3-வது உலகப்போர் மூளும் - பெலாரஸ் அதிபர் எச்சரிக்கை
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த கிஷோர் ரவி ஐபிஎஸ் தீயணைப்பு துறையின் டிஜிபியாக பதவிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தீயணைப்பு துறை டிஜிபியாக இருந்த கரண் சின்ஹா ஐபிஎஸ் இன்று பணி ஓய்வு பெற உள்ளார்.
பெலாரஸ் நாட்டில், உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாள் காவல். தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாள் காவல்..
ரஷ்ய படை தொடுத்த போரில் 14 குழந்தைகள் உட்பட 352 குடிமக்கள் உயிரிழப்பு - உக்ரைன்
இந்தியர்களை மீட்பதற்கான ஆபரேஷன் கங்கா திட்டத்தில், ஏர் இந்தியாவைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் விமானமும் களமிறங்குகிறது
தாக்குதல் வேகத்தை ரஷ்ய படைகள் குறைத்திருப்பதாக உக்ரைன் தரப்பு தகவல்
இந்தியர்களை மீட்டு வரும் 6-வது விமானம் ஹங்கேரியில் இருந்து புறப்பட்டது..
உக்ரைனில் சிக்கியிருக்கும் 15000 இந்தியர்களை மீட்க, எல்லை நாடுகளுக்கு நான்கு மத்திய அமைச்சர்கள் புறப்படுவதாகத் தகவல்..
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்த, பெலாரஸ் சென்றது உக்ரைன் குழு.. முடிவுக்கு வருமா போர்?
உக்ரைன் விவகாரம் : வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் பிரதமர் இன்று ஆலோசனை
உக்ரைன் போர் பதற்றச் சூழலுக்கு இடையே, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய பணமதிப்பில் 40 காசுகள் வீழ்ச்சியடைந்துள்ளது
தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்துள்ளது. உக்ரைன் போர் பதற்ற சூழலில் தங்கம் விலை கடும் உயர்வு
போலந்து எல்லை வரை சென்றோம். எங்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள் எனக்கூறிய தமிழக மாணவர், உக்ரைனில் இருந்து தமிழக தங்களை மீட்குமாறு தவிப்புடன் கோரிக்கை வைத்துள்ளார்
உக்ரைனிய ராணுவப் பிடியில் துடித்துக் கதறும் இந்தியர்கள்.. கோரிக்கை வைத்த ராகுல்.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தர்களுக்கு எண்ணிக்கை 119
போரை நிறுத்திக்கொள்ள ரஷ்யாவுக்கு உத்தரவிடுமாறு, சர்வதேச நீதிமன்றத்தை நாடியது உக்ரைன்..
அறநிலையத்துறை பூஜை புணஸ்காரங்களில் ஈடுபடுவது எதுக்கு? என அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக விமர்சித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி..!
உத்தர பிரதேசத்தில் முன்னேற்றத்தைக் குறித்து அகிலேஷ் யாதவ் நினைத்ததே இல்லை - யோகி ஆதித்யநாத்
Background
பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அழைப்பு விடுத்தநிலையில், முதலில் மறுத்த உக்ரைன் தற்போது அழைப்பை ஏற்றுள்ளது. இந்த பேச்சுவார்தைக்கு முன்பு நிபந்தனைகள் எதுவுமில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அண்டை நாடான பெலாரஸ் எல்லையில் உக்ரைன்- ரஷ்யா இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -