Breaking LIVE: பள்ளி பாடத்தில் பகவத் கீதை பாடம் கட்டாயம் - குஜராத் அரசு அறிவிப்பு
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகத்தில் பகவத் கீதை பாடம் கட்டாயம் இடம் பெறும் என குஜராத் அரசு அறிவித்திருக்கிறது
தமிழகத்தில் ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது
ஹஜ் பயணம்: மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு, ஹஜ் பயணத்துக்கு சென்னையிலிருந்து செல்ல அனுமதிக்கவேண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும், 18 ம் தேதி (நாளை) மட்டும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட நிலை காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுக்குமாடி கட்டத்துக்கான கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. சதுர மீட்டருக்கான கட்டணத்தை ரூ.198லிருந்து ரூ.218 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை ஏற்று மிலானி என்ற வாக்காளரின் வழக்கை நிராகரித்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 846 புள்ளிகள் உயர்ந்து 57,662 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 237 புள்ளிகள் உயர்ந்து 17,213 புள்ளிகளில் வணிகமாகிறது.
5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலு, பரனூர் உள்ளிட்ட நகராட்சி, மாநகராட்சி பகுதியில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். 8 சாலைகளை நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தவும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு 60 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் ஒரேநாளில் 2,539 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக வலுப்பெற்று மார்ச் 23-ல் வங்கதேசத்தை நெருங்க இருப்பதாக தெரிகிறது.
கட்டுமான பொருட்களின் கட்டுக்கடங்கா விலையை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். கட்டுமான பொருட்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வந்து மக்கள் வீடு கட்டும் செலவினை குறைக்க வேண்டும் என்றும் கூறினார்.
தமிழக சட்டப் பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்; முழு பட்ஜெட்டாக தாக்கல் செய்வதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
உக்ரைன் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று கூடுகிறது
ஜம்மு - காஷ்மீர் : ஸ்ரீநகரின் வடக்கு பகுதியில் நிலஅதிர்வு - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
இதுவரை உலகளவில் 46.32 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 133-ஆவது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் காலை 5 மணி இரவு 11 மணி வரை இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Background
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உள்ள தெற்கு அந்தமான் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -