Breaking LIVE: உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துக - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு..
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துக - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு..
கிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது
நெல்லையில் பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை... தற்காப்புக்காக என்கவுண்ட்டர் செய்ததாக தென்மண்டல ஐஜி விளக்கம்..
பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே பிரபல ரவுடி நீராவி முருகனை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர். இவர் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் உள்ள நீராவி என்ற தெருவில் வசித்து வந்தார். இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. 80க்கும் அதிகமான வழக்குகள் அவர்மீது நிலுவையில் இருந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட போலீசாரால் நீராவி முருகன் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
சூப்பர்ஸ்பெஷலாட்டி மருத்துவ படிப்புக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசின் அரசாணையை இந்தாண்டு இடைக்காலமாக செயல்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கத்திற்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 139 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பஞ்சாப் மாநில முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் இன்று பதவி ஏற்க உள்ளநிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கீழவளம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையில் விடியற்காலை 3 மணிக்கு மேல் மதுராந்தகம் போலீசார் சதீஷ் ரமேஷ் ஆகியோர் ரோந்து பணியின்போது டாஸ்மாக் கடைக்கு சென்று பார்த்தபோது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பூட்டை உடைக்க முயற்சி செய்தபோது இவர்களை பார்த்து தப்பி ஓட முயன்றனர் அப்போது அவர்களை பிடிக்கச் சென்ற காவல்துறையினரை கத்தியால் தாக்கிவிட்டு அவர் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடியநிலையில் மதுராந்தகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு - காஷ்மீர் : ஸ்ரீநகர் அருகே நவ்காமில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.
உலகளவில் 46. 15 கோடி பேருக்கு கொரோனா தொற்று ; 60.73 லட்சம் பேர் உயிரிழப்பு ; 39.48 பேர் குணமடைந்துள்ளனர்.
பஞ்சாப் மாநில முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் இன்று பதவி ஏற்க இருக்கிறார்.
FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி - 2022 சர்வதேச செஸ் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 ம் தேதி நடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், இது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் தொடர்ந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது சர்வதேச நீதிமன்றம். ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டி உக்ரைன் வழக்கு தொடர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Background
நாடுமுழுவதும் 12 முதல் 14 வயதான சிறுவர்களுக்கு இன்று முதல் கோர்போவாக்ஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் 12 முதல் 14 வயதான 21. 21 லட்சம் சிறுவர்களுக்கு கோர்போவாக்ஸ் தடுப்பூசி போடப்பட இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -