முதியவரை மிரட்டி பணம் பறித்ததாக இந்து மக்கள் கட்சியின் மாநகர துலைவர் கைது
சென்னை திருவல்லிக்கேணியில், முதியவரை மிரட்டி பணம் ப்றித்ததாக, இந்து மக்கள் கட்சியின் மாநகர துலைவர் மகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Breaking Live : போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அழைப்பு
மூன்று நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு பள்ளி கல்வித்துறை செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தை சேர்ந்த முக்கிய 8 நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
அன்பில் மகேஷ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்- முதலமைச்சர் முக ஸ்டாலின்
எனது உயிர் நண்பர் ‘அன்பில்’ பொய்யாமொழி பெயரை நிலைநாட்டக் கூடிய வகையில் தம்பி அன்பில் மகேஷ் செயல்பட்டு வருகிறார். பள்ளிக் கல்வித் துறையை இந்தியாவிலேயே மிகச் சிறந்த துறையாக ஆக்க, அவர் நித்தமும் உழைத்துக்கொண்டிருக்கிறார் என திருச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி - முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் வெள்ளி விலை 60 காசுகள் குறைந்து ரூ.74.00 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 600 ரூபாய் குறைந்து ரூ74,000 ஆக விற்பனையாகிறது.
சரிந்த தங்கம் விலை..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ. 40,760 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.5,095 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 43,976 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,497 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி..!
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 3 மற்றும் 5ஆவது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
ட்விட்டர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது.. ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல்..
கம்ப்யூட்டரில் ட்விட்டர் சமூக வலைதள கணக்கை லாக்கின் செய்வதில் ஏற்பட்ட சிக்கல் சீரமைக்கப்பட்டது. தற்போது Error என வந்த செய்தி சரி செய்யப்பட்டதாக ட்விட்டர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
டிவிட்டர் டவுன்.. லாக்கின் செய்வதில் சிக்கல்..
கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் ட்விட்டர் சமூக வலைதள கணக்கை லாக்கின் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ட்விட்டர் பயனாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் ட்விட்டர் கணக்கை லாக்கின் செய்யும்போது பயனாளர்களுக்கு Error என்ற தகவல் வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டம்.. இரவு 1 மணி வரை மட்டுமே அனுமதி..
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை - தமிழக டிஜிபி உத்தரவு
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு பயணம்.. பயணத்திட்டம் என்ன?
திருச்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்கான முதலமைச்சர் முக ஸ்டாலில் இன்று திருச்சி வருகை
பொங்களுக்கான சிறப்பு ரயில் முன்பதிவு.. இன்று தொடக்கம்..
பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Background
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து நாகர்கோவில்' திருவனந்தபுரம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது, ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 அன்று இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022) திருநெல்வேலி யிலிருந்து ஜனவரி 13 அன்று மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
நின்று செல்லும் இடங்கள்
செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டணம் ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 அன்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
நின்று செல்லும் இடங்கள்
இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06057) ஜனவரி 16 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06058) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17 அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
நின்று செல்லும் இடங்கள்
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதி உள்ள பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06044) கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17 அன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு கட்டண ரயில் (06043) தாம்பரத்திலிருந்து ஜனவரி 18 அன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.
நின்று செல்லும் இடங்கள்
இந்த ரயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 16 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூண்கள் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.