இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வரும் மே 29 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

Continues below advertisement

இஸ்ரோ 2020 ஆம் முதல் கடந்த ஆண்டு வரை ஆண்டுக்கு 2 செயற்கைக்கோள் மட்டுமே விண்ணில் செலுத்தியது. இந்த ஆண்டு மூன்றாவது ராக்கெட்டை வரும் 29ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சாலை, கடல் மற்றும் விமான போக்குவரத்துக்கு வழிகாட்டுவதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். பிரிவில் 1ஏ, 1பி என மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-22, பி.எஸ்.எல்.வி. சி-24, பி.எஸ்.எல்.வி. சி-26, பி.எஸ்.எல்.வி. சி-27, பி.எஸ்.எல்.வி. சி-31, பி.எஸ்.எல்.வி. சி-32 உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் ஜூலை 2013-ம் ஆண்டு, ஏப்ரல், அக்டோபர் 2014-ம் ஆண்டு, மார்ச் 2015-ம் ஆண்டு , ஜனவரி 2016-ம் ஆண்டு மற்றும் மார்ச் உள்ளிட்ட ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட்டது. இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஜி என்பது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விண்வெளிப் பிரிவில் உள்ள 7 செயற்கைகோள்களில் 7-வது செயற்கைகோளாகும். இந்த செயற்கைக்கோள் 2016 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது அதன் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில். அதற்கு மாற்றாக வேறு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இது என்.வி.எஸ் என பெயரிடப்பட்டுள்ளது.  இது அடுத்த தலைமுறை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 விண்கலம் மூலம் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.15 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் 28 அல்லது 29 ஆம் தேதி தொடங்கும்.  

NavIC ஆனது ஏழு செயற்கைக்கோள்கள் மற்றும் 24 மணி நேரம் இயங்கும் தரை நிலையங்களின் வலையமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்மீன் கூட்டத்தின் மூன்று செயற்கைக்கோள்கள் புவிசார் சுற்றுப்பாதையிலும், நான்கு செயற்கைக்கோள்கள் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையிலும் ( inclined geosynchronous orbit) நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதே திட்டத்துடன் இஸ்ரோ தனது முதல் சூரிய ஆய்வு திட்டமான ஆதித்யாவின் முதல் சோதனை திட்டம் ஆதித்யா-எல் 1 இந்த ஆண்டில் மூன்றாம் காலாண்டில் விண்ணில் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் ராக்கெட்டுக்கான 2 சோதனை ராக்கெட்டுகளில் ஒன்று இந்த ஆண்டு பிற்பகுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.

Continues below advertisement

TN 10th Supplementary Exam: 10 ஆம் வகுப்பு தேர்வில் 78,706 பேர் தோல்வி.. வெளியானது துணைத்தேர்வுக்கான அறிவிப்பு..!

Private vs Govt Schools: 10 ஆம் வகுப்பு தேர்வில் மாஸ் காட்டிய அரசுப் பள்ளிகள்.. பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் எவ்வளவு?

10th Result District Wise: ’படிப்பே எங்கள் மூச்சு’ .. 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த பெரம்பலூர்.. கடைசி இடம் இந்த மாவட்டமா?