இத்தாலி நாடு ரோம் நகரில் இறந்து இரண்டு ஆண்டுகளான 70 வயது மூதாட்டியின் உடலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தனியாக வசித்து வந்த மூதாட்டி மரினெல்லா பெரட்டாவின் உடல் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.


ப்ரெஸ்டினோ என்ற பகுதியில் உள்ள கோமோ ஏரிக்கு அருகே இந்த மூதாட்டியின் வீடு இருந்துள்ளது. யாருமில்லாத அந்த வீட்டு தோட்டத்தில் இருந்த மரங்களின் கிளைகள் வளர்ந்து தொங்கி உள்ளது. இதை கவனித்த அப்பகுதி காவல்துறையினர், வீட்டை முற்றுகையிட்டு மரக்கிளைகளை நீக்குமாறு அறிவுரை கூற சென்றனர். 


வீட்டினுள் நுழைந்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த சமையலைறை பகுதியில், இறந்து இரண்டு ஆண்டுகளான மூதாட்டியின் உடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாற்காலியில் அமர்ந்திருந்தபடி மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மூதாட்டியை யாரும் வெளியே பார்க்கவில்லை என அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டுக்கு பிறகு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மரியனெல்லா வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்தினர் நினைத்துள்ளனர். 


மேலும் படிக்க: Wrestler Khali Joins BJP: நோ சொன்னதா ஆம் ஆத்மி...? பாஜகவில் ஐக்கியமான மல்யுத்த வீரர் ‘கிரேட் காளி’


ஆனால், நாற்காலியில் அமர்ந்தபடி அவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இறப்பதற்கு முன்பு அந்த மூதாட்டி கோமா நிலையில் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு 70 வயது இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இத்தாலி சுகாதார துறையை உலுக்கியுள்ளது. அதனை அடுத்து வெளியான தகவலின்படி, இத்தாலி நாட்டில் கிட்டத்தட்ட 40%க்கும் அதிகமான 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனிமையாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், கவனிக்காமல் விடப்படும் முதியவர்களின் கடைசி கால வாழ்க்கை நிலை என்ன ஆகிறது என்பது தெரியாமல் இருக்கிறது என பலர் கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர். 


அதனை தொடர்ந்து, மீட்கப்பட்ட மரியனெல்லாவின் உடலை தகனம் செய்ய காவல்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. மேலும், இத்தாலியில் வாழும் முதியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தேவையானஉதவிகளையும், திட்டங்களையும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கருத்து வலு பெற்றுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண