ஆந்திராவில் உள்ள சூர்யராவ்பேட்டையில் கடந்த புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் 28 வயது பெண் ஒருவர் RTC பேருந்தை நிறுத்தி, பேருந்தில் நுழைந்து, டிரைவரின் சட்டையின் காலரை இழுத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். 


அந்த பெண், விதிகளை மீறி ராங் ரூட்டில் எதிரில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து லேசாக மோதி சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், பேருந்தை நிறுத்தி, டிரைவரை போட்டு புரட்டி எடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் டிரைவரை அடிப்பதை நிறுத்துமாறு அந்தப் பெண்ணிடம் கேட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த பெண் அரசு பேருந்து டிரைவரை தாக்கியும் மற்றும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் திட்டியுள்ளார்.






தகவலின் பேரில், போக்குவரத்து காவலர் ஒருவர் சம்பவ இடத்துக்கு வந்து அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த பெண், காவலரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து டிரைவரை காலால் உதைத்தும், சட்டையை கிழித்தும் கீழே இறங்குடா என்று புரட்டி எடுத்துள்ளார். 


மேலும், ஒரு சில காவலர்கள் விரைந்து வந்து அருகில் உள்ள சூர்யாராவ் பேட்டை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.






யார் இந்த பெண் : 


டிரைவரை தாக்கிய பெண், கிருஷ்ணா லங்காவின் தாரக ராம நகரில் வசிக்கும் கே நந்தினி என்று தெரியவந்துள்ளது. ஆர்டிசி ஓட்டுநரை தாக்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, அந்த பெண்ணை சரமாரியாக பல நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண