Breaking News LIVE Today: திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்திய வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது..

Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 21 Feb 2022 08:52 PM
”எனது தந்தை கைது செய்யப்பட்டது முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம்” - ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன்

"முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தரும் மரியாதை இதுதானா. எனது தந்தை கைது செய்யப்பட்டது முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம்" ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது : எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது : எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் அழைத்துச்செல்லப்பட்டார்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் அழைத்துச்செல்லப்பட்டார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

கொலை மிரட்டல் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் வண்ணாரப்பேட்டை காவல்துறையினர்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது..

சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது..

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

திருவண்ணாமலை நகராட்சி 25வது வார்டு மறு வாக்குப்பதிவு 6 மணி நிலவரம்

திருவண்ணாமலை நகராட்சி சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் மறுவாக்குப்பதிவு வாக்குச்சாவடியில்  பெண்கள் 596 நபர்கள் ஆண்கள் 597 நபர்களும் மொத்தமாக 1193 நபர்கள் வாக்களித்தனர். மொத்த 75.03 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி தேர்தலை நடத்துவது நாங்கள் இல்லை - அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்

ட்விட்டரில் டேக் செய்து கேள்விகேட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. மாநகராட்சி தேர்தலை நடத்துவது நாங்கள் இல்லை - அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்

கன்னியாகுமரி மாவட்டத்திலும் நாளை மதுபானக் கடைகள் அடைக்கப்படுவதாக அறிவிப்பு - மாவட்ட நிர்வாகம்

கன்னியாகுமரி மாவட்டத்திலும் நாளை மதுபானக் கடைகள் அடைக்கப்படுவதாக அறிவிப்பு - மாவட்ட நிர்வாகம்

சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை மதுபானக் கடைகள் அடைப்பு - அறிவிப்பு

சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை மதுபானக் கடைகள் அடைப்பு - அறிவிப்பு

துபாய் செல்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் கலந்துகொள்ள அடுத்த மாதம் துபாய் செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்

ரூ.60 லட்சம் அபராதம்

லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

ஜாமினில் வெளியே உள்ளார் லாலு..

ஏற்கெனவே 4 வழக்குகளி சிறைத்தண்டனை பெற்ற நிலையில் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார் லாலு..

5வது வழக்கில் சிறைத்தண்டனை

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில் சிறைத்தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

லாலு பிரசாத் யாதவ்க்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

கால்நடைத் தீவின ஊழல் தொடர்பான மற்றொரு முக்கியமான வழக்கில் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்க்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவு

வாக்குப்பதிவின் போது தாக்குதல் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு

சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவர் மீது தாக்குதல் நடத்தியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு. திமுகவை சேர்ந்த நரேஷ் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பள்ளி மாணவிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்

மெரினாவில் குடியரசு தின அலங்கார ஊர்திகளை பார்வையிட்ட மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அலங்கார ஊர்திகளுடன் முதலமைச்சர் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை - சிபிஐ விசாரணை தொடக்கம்

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். மாணவி தங்கியிருந்த பள்ளி விடுதியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் விடுவிப்பு !

நாகையைச் சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இந்நிலையில் அவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் 21 பேரும் விடுவிக்கப்பட்டனர். 

நாளை வாக்கு எண்ணிக்கை - மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மனுத்தாக்கல் செய்யாமல் விசாரிக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்

சிவகாசி மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கையை மத்திய அரசு ஊழியர்களை வைத்து எண்ண வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யாமல் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சிபிஎஸ்.இ தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் !

சிபிஎஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நேரடியாக நடத்துவது தொடர்பான மனுவை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.

கடற்படை அணிவகுப்பை பார்வையிட்ட குடியரசுத் தலைவர்

ஆந்திரா விசாகப்பட்டினத்தில் கடற்படை அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார் - அணிவகுப்பில் 60 போர்க்கப்பல்கள், 55 போர் விமானங்கள் பங்கேற்றன.

உலக தாய்மொழி நாள் - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 





ஆந்திர ஐடி அமைச்சர் கெளதம் ரெட்டி மாரடைப்பால் மரணம்

ஆந்திர மாநிலத்தின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கெளதம் ரெட்டி மரடைப்பால் மரணமடைந்தார்.

திருவண்ணாமலை: காலை 9 மணி வரை 16.35% வாக்குப்பதிவு

திருவண்ணாமலையில் நகராட்சியில் நடைபெறும் மறுவாக்குப்பதிவு வாக்குச்சாவடியில் 9 மணி நிலவரப்படி பெண்கள் 145 நபர்கள், ஆண்கள் 115 நபர்கள் வாக்களித்தனர். மொத்தமாக 260 நபர்கள் வாக்களித்துள்ளனர். 16.35 வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி - 10 கிலோ போதைபொருள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த கிரிஸ்டல் மெத்தம்படமைன் என்ற போதை பொருள் 10 கிலோ பறிமுதல்

திருவண்ணாமலை 25 வார்டு மறு வாக்குப்பதிவு பதிவு 8.30 மணி நிலவரம்

திருவண்ணாமலை நகராட்சி 25 வார்டுக்கான  மறுவாக்குப்பதிவு சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. தற்போது வரையில் ஆண்கள் வாக்குச் சாவடியில் 91 வாக்களார்கள் பெண்கள் வாக்கு சாவடியில் 63 வாக்காளர் என மொத்தமாக 154 வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

திருவண்ணாமலை 25வது வார்டுக்கு மறுவாக்குப்பதிவு

திருவண்ணாமலை நகராட்சியில் 25-வார்டுக்கு   மறு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறு வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஷ் ஆய்வு நடத்தினார்.

7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

Background

சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 5 வார்டுகளின் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


சென்னை வண்ணாரப்பேட்டை 51ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 1174இல், பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் வார்டு எண் 179இல் 5059ஆம் வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எந்திரம் உடைக்கப்பட்ட ஓடைக்குப்பம் வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.


இதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடிஎண் 17W-இல், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு எண் 16, வாக்குச்சாவடி எண் 16 M, 16 Wஇல், திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 25 வாக்குச்சாவடி எண் 57 M, 57 W இல் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.


மேலும் வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறு வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம், அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு  இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.