Breaking News LIVE Today: மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1100, ஆண்டுக்கு 8 கேஸ் சிலிண்டர்கள் - தேர்தல் வாக்குறுதி அளிக்கும் பஞ்சாப் காங்கிரஸ்..

Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 18 Feb 2022 08:07 PM
மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1100, 8 கேஸ் சிலிண்டர்கள் - தேர்தல் வாக்குறுதி அளிக்கும் பஞ்சாப் காங்கிரஸ்..

மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1100, 8 கேஸ் சிலிண்டர்கள் - தேர்தல் வாக்குறுதி அளிக்கும் பஞ்சாப் காங்கிரஸ்..

கூடங்குளம் அணு உலை கழிவு விவகாரம் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கூடங்குளம் அணு  உலை கழிவு விவகாரம் - பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்

ஹிஜாப் விவகாரம் : ஹிஜாப் அணியக்கூடாது என வற்புறுத்தியதால், கண்டனத்தை தெரிவித்து ராஜினாமா செய்தார் பேராசிரியர் சாந்தினி நாஸ்

ஹிஜாப் அணியக்கூடாது என வற்புறுத்தப்பட்டதால், வேலையை ராஜினாமா செய்தார் பேராசிரியர் சாந்தினி நாஸ்

ஹிஜாப் அணியக்கூடாது என வற்புறுத்தப்பட்டதால், வேலையை ராஜினாமா செய்தார் பேராசிரியர் சாந்தினி நாஸ்

1000 ஏக்கர் வனப்பகுதியைத் தத்தெடுத்தார் நாகார்ஜுனா

1000 ஏக்கர் வனப்பகுதியைத் தத்தெடுத்தார் நாகார்ஜுனா

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைகால தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்த நிலையில், பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

தொழிற்துறை 4.0 திட்டத்திற்கு ரூ. 2,201 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு

தொழிற்துறை 4.0 திட்டத்திற்கு ரூ. 2,201 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

அகமதாபாத் குண்டுவெடிப்பு - 38 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு 

போதிய ஆசிரியர்களை நியமிக்க கோரி புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் போதிய பேராசிரியர்களை நியமிக்க கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு. சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வந்ததால், அவர்களுக்கு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - ஆணைய விசாரணை நிறைவு

09- 08-2018 அன்று ஆரம்பித்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையானது இன்று நிறைவடைந்தது. இன்னும் மூன்று மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஒரு நபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகரன் தெரிவித்தார்

6 ஆயிரம் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணிகள் ஆணையத்தில் 6 காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது

குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான தேதி என்ன?

அரசுப்பணிகள் தேர்தவாணையத்தின் குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது


 

இன்னும் சில நிமிடங்களில் செய்தியாளர் சந்திப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தொடர்பாக இன்னும் சிறிது நேரத்தில்(பகல் 11 மணி) செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. 

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம், கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.4742-க்கும், சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்து ரூ. 37,936-க்கும் விற்பனையாகிறது. 

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரில் 50 மாணவர்கள் சேர்ப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதற்கட்டமாக 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸில் சேர்ந்த மாணவர்கள் ராமநாதபுரம் அரசு புதிய மருத்துவ கல்லூரியில் படிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

திருச்சி அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

திருச்சி இனாம்குளத்தூர் அரசு பள்ளியில் +2 பயின்று வந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்று போக்சோவில் கைதான ஆசிரிய முருகேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்திற்குள் கீழாக குறைந்துள்ளது

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு 2,92,092 பேர் சிகிச்சை எடுத்து கொண்டு வருகின்றனர். ஒரே நாளில், 492 பேர் உயிரிழந்துள்ளனர், 66,254 பேர் குணமடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு

சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.63 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 75.08 டி.எம்.சியாகவும் குறைந்திருக்கிறது

இன்றைய கொரோனா நிலவரம்

பிப்ரவரி 18-ம் தேதி காலை நிலவரப்படி, உலகில் 41.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில், 58.80 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிகிச்சை மேற்கொண்டு 34.33 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

தீவிரமாகும் உக்ரைன் - ரஷ்யா போர் மோதல்

உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொண்டதாக ரஷ்யா ஏமாற்றுகிறது. எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வு தேதி இன்று அறிவிப்பு

2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி  குரூப் 2 மற்றும்  குரூப் 2ஏ தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், இன்று (பிப்.18) மதியம் அறிவிக்க உள்ளார்.

இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தனர்

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 47 மீனவர்கள் விமானம் மூலம் தமிழ்நாடு வந்தடைந்தனர். பாதுகாப்பாக நாடு திரும்பிய மீனவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Background

2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி  குரூப் 2 மற்றும்  குரூப் 2ஏ தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், இன்று (பிப்.18) மதியம் அறிவிக்க உள்ளார்.


குரூப் 2, 2 ஏ - குரூப் 4 - காலிப் பணியிடங்கள் எத்தனை?


குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான காலி பணியிடங்கள் - 5,831


குரூப் 4 தேர்வில் பழைய காலிப் பணியிடம் 5,255, புதிய காலிப் பணியிடம் 3,000


* காலிப் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது.


தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகளை நடத்தவும் டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்பட்டு, விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.