- ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிவடைந்தது.
- நேற்றிரவு நடந்த ஐபிஎல் போட்டியில், ஹைதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது.
- புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து, நலன் காத்திட ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். புலம்பெயர்ந்தோருக்கு தேவையான ஆலோசனை, நிதி - சட்ட உதவி, அவர்தம் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்பு, பண்பாட்டு பரிமாற்றம் என வாரியம் உற்றதோழனாக விளங்கும் என்றும் தெரிவித்தார்.
- நீலகிரி மாவட்டத்தில், மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ள புலியை விரைவில் பிடித்து விடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரி படுகொலை குறித்து உச்சநீதிமன்றம் தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அதை இன்று விசாரிக்கிறது.
- லக்கிம்பூர் வன்முறைச் சம்பவத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்வதாக பிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.
- வேதியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் W C மேக்மில்லன் ஆகிய இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- அஞ்சல் பண விடை படிவம் அழகு தமிழிழும் கிடைக்கும். தமிழுக்கு கிட்டிய இன்னுமொரு வெற்றி. எனது கடிதத்திற்கு ஒன்றிய அமைச்சகமும், அஞ்சல் பொது மேலாளரும் பதில். நடவடிக்கைக்கு நன்றி என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்தார்.
- மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வு இந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்தின்படியே நடத்தப்படும் என மத்திய அரசும், தேசிய தேர்வு வாரியமும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. பழைய பாடத்திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மத்திய அரசு இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தள்ளது. அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்தில் கொரோனா தொற்று காணப்படுவதால், அடுத்த ஆண்டு பிர்மிங்காமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டு ஹாக்கிப் போட்டியிலிருந்து விலகுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
மேலும், வாசிக்க:
RCB vs SRH: ஏபிடிக்கு என்ன ஆச்சு? கடைசி ஓவரில் ஹைதராபாத் த்ரில் வெற்றி
Local Body Polls First Phase LIVE: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
’டி 23 புலி ஆட்கொல்லி இல்லை’ – தமிழ்நாடு முதன்மை வன உயிரின பாதுகாவலர் விளக்கம்..!