இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.


தமிழ்நாடு:



  • தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்.

  • கடந்த 24 மணி நேரத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. 

  • மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக, முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்தார்

  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,24,849   மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  1,179 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 156   பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16  பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1407 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

  • சோமேட்டோ நிறுவன ஊழியர் தனது வாடிக்கையாளரிடம் இந்தி தெரியாதா? இந்தி இந்தியாவின் தேசிய மொழி என சொல்லியது தேசிய அளவில் பெரும் விவாதம் ஆகியது.  

  • தமிழக ஆளுனர் ரவியை அதிமுக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்திக்கிறார்


இந்தியா: 



  • உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனித்தால், சம்பவாத், பன்செஸ்வர்    போன்ற பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத மழை பொழிவை சந்தித்தது. இதன் காரணமாக மாநிலத்தின் பல தொலைதூர நகரங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.இந்த கனமழை காரணமாக ,30 பேர் வரை உயிரிழந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.    

  • இன்று உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி, குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.குஷிநகர் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்திலிருந்து வரும் விமானம்  முதலில் தரையிறங்குகிறது. இந்த விமானத்தில் இலங்கையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் வருகை தர உள்ளனர். 

  • புதிய கட்சி தொடங்குகிறார் முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங். விவசாயிகளின் பிரச்சனைகளில் தீர்வு காண முன்வரும் பட்சத்தில், 2022 மாநிலத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  


விளையாட்டு: 



  • துபாயின் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியில் மெழுகுச்சிலை பொம்மை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கோலி இந்திய கிரிக்கெட் அணியின் யுனிஃபார்ம் அணிந்து பேட்டிங் செய்வது போல இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது 

  • உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பயிற்சி போட்டி இன்று நடைபெறஉள்ளது. 


உலகம்:



  • சீனாவில் சட்டத்திற்குக் கட்டுப்படாத குழந்தைகளைப் பெற்று வளர்த்த பெற்றோருக்குத் தண்டனை அளிக்கும் சட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தச் சட்டத்தின் அடிப்படையில், குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நாட்டின் கட்சி, தேசம், மக்கள், சோசியலிசம் ஆகியவற்றை விரும்புவதற்கு வலுக்கட்டாயமாகக் கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது