துபாயின் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியில் மெழுகுச்சிலை பொம்மை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கோலி இந்திய கிரிக்கெட் அணியின் யுனிஃபார்ம் அணிந்து பேட்டிங் செய்வது போல இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கோலிக்காக வைக்கப்படும் இரண்டாவது மெழுகுச் சிலை. ஏற்கெனவே 2019ல்  உலகக் கோப்பை போட்டியின்போது லார்ட்ஸ் மைதானத்தில் கோலிக்காக ஒரு மெ்ழுகுச் சிலை திறந்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. துபாயில் இருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இங்கிலாந்து மகாராணி, டேவிட் பெக்கம், ஜாக்கி சான் ஆகியோரது மெழுகுச் சிலைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளுக்கு இடையே கடந்த 14ம் தேதி விராட் கோலியின் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. 


 






முன்னதாக, நடப்பு டி20 சீசனுடன் ஆர்.சி.பி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தான் விலக உள்ளதாக விராட் கோலி அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர், "இத்தனை ஆண்டுகள் ஆர்சிபி அணியின் கேப்டனாக பல திறமையான வீரர்களை வழி நடத்தி சென்றுள்ளேன். இத்தனை நாட்கள் எனக்கு உறுதுணையாக இருந்த ஆர்சிபி வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். இந்த முடிவு எடுக்க சற்று கடினமாக தான் இருந்தது. எனினும் அணியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். எனினும் நான் முன்பாக கூறியது போல் எப்போதும் ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடுவேன். என்னுடைய ஓய்வு வரை ஆர்சிபி அணிக்கு மட்டுமே விளையாடுவேன் " எனக் கூறியிருந்தார்.