தமிழ்நாட்டில் இன்று 1,24,849 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,179 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 156 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1407 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் 156 பேருக்கும், கோயம்புத்தூரில் 127 பேரும், செங்கல்பட்டில் 98 பேருக்கும், ஈரோட்டில் 82 பேருக்கும், தஞ்சாவூரில் 71 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவையில் இன்று 127 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 45,720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 45,201 போ் குணமடைந்தனர். 355 போ் உயிரிழந்தனர். இந்த தினசரி பாதிப்பு பொது முடக்கம் காரணமாக படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த நிலையில் இன்று (19-10-2021) 9 நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதே நிலை நீடித்தால், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் மேலும் குறைந்து, பாதிப்பு வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று மட்டும் 10 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட இரண்டு பேருக்கு தொற்று குறைவு. இதுவரை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 181 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 22 ஆயிரத்து 692 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 10 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 23 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் உயிரிழக்காததை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியானவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 315 ஆக தொடர்கிறது.