Tamil News Headlines Today: 


துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்,  இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி  8 விக்கெட்  வித்தியாசத்தில் ஹைதரபாத் அணியை வென்றது.


ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதனையடுத்து, அவரும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


DC vs SRH, Match Highlights: ஹைதராபாத்தை காலி செய்த டெல்லி, மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் 


Natarajan Tests Covid 19 Positive: தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா... ஐபிஎல் ரத்தாக வாய்ப்பு?




கனடா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜஸ்டின் ட்ரூடோவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்குமாறு தேசிய பேரிடர் மேலாண் ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


குத்தகைக்கு விடப்பட்டுள்ள கோயில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்புமாறு சென்னை உயர்நீதிமன்றம், அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.


“ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பிலான ஏற்றுமதிக் கண்காட்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திறந்து வைத்து, பார்வையிட்டார். மதிப்புக் கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, அவற்றை ஏற்றுமதி செய்பவர்களுக்கு ’தொகுப்புச் சலுகைகள் வழங்கும் திட்டம்’ வடிவமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் ’மாவட்ட ஏற்றுமதி மையங்கள்’ உருவாக்கப்பட்டு, அந்தந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்த பொருட்கள் உலக அளவில் சந்தைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 


 அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை சீர்திருத்தங்கள், முதலீட்டு வசதிகள், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வது உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளால் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து அதிகரித்துள்ளதாக  மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது . 2021-22 நிதியாண்டின் முதல் நான்கு மாதத்தில் 27.37 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈட்டியுள்ளது. இது கடந்த 2020-21 நிதி ஆண்டின் இதே காலத்தை விட 62% அதிகமாகும்.


டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.  


 மேலும், வாசிக்க: 


NEET Exam: அநீதியை அகற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்..


PM Modi : பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?