Top Headlines: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்... பெகாசஸ் விவகாரம்... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையளங்களில் அறியலாம். 

Continues below advertisement

மும்பையில் பெய்து வரும் கன மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர், 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. நேற்று, அனைத்து கட்சி கூட்டத்திற்கு பேசிய பிரதமர் மோடி, இந்த கூட்டம் மிகவும் ஆக்கப்பூர்வமாக அமையும் என்று  நம்பிக்கை தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்தவொரு பிரச்சினைக் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.       

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

புதுடெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார். 

இந்தியாவில் பெகாசஸ்' ஸ்பைவேர் செயலி மூலம் வேவுபார்க்கப்பட்ட 300 நபர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில், மே 17 அமைப்பைச் சேர்ந்த திருமுருகன் காந்தியும் இடம்பெற்றுள்ளார். 

ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூஸ் 18, தி வயர் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் உட்பட 40  இதழ்களின் பத்திரிக்கையாளர்களின் சாதனங்களில் இந்த ஸ்பைவேர் இருப்பதாக ஃபாரன்சிக் டீம் கண்டறிந்துள்ளது.

தமிழகத்தில்  கடந்த 24 மணி நேரத்தில்  2,079 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 27,897 பேர் மட்டுமே மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

பாலியல் தொல்லை குறித்து மாணவ - மாணவியர் அச்சமின்றி தகவல் தெரிவிக்கும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வாசிக்க: 

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உளவு பார்க்கப்பட்டுள்ளார் 

WhatsApp Spyware Pegasus: Whatsapp-ஐ எப்படி ஹேக் செய்கிறது இந்த பெகசஸ் ஸ்பைவேர்..! 

Pegasus Phone Tap | 40 இந்திய பத்திரிகையாளர்களின் உரையாடல்கள் ஒட்டுகேட்பு : பெகசஸை உறுதிப்படுத்தியது ஃபாரன்சிக் டீம்..!   

 

Continues below advertisement
Sponsored Links by Taboola