*2021 சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது. நன்கு வகுப்பட்ட மதிப்பீடுகள் மூலம், நியாயமான முறையில் தேர்வு முடிவுகள் வெளியடப்படும் என்றும் தெரிவித்தது.
*கடந்த ஆண்டைப்போல், சில மாணவர்கள் தேர்வு எழுத விரும்பினால், அதற்கான வசதியை, நிலைமை சீரடையும் போது சிபிஎஸ்இ ஏற்பாடு செய்யும்.
*குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை எதிர்கொள்ள, தேசிய நிபுணர் குழு ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் தெரிவித்தார். குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதாகவும் மருத்துவமனை சிகிச்சை வெகு சிலருக்கே தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்
*தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
*மத்திய அரசின் தொகுப்பிலிருந்து, தமிழகத்திற்கு மேலும் 4,20,570 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் நேற்று மாலை சென்னை வந்தடைத்து. இந்த தடுப்பூசிகள் நேற்றிரவு மாவட்ட வாரியாக பகிர்ந்தளிக்கும் பணி நடைபெற்றது.
Covishield Vaccine: 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பிய மத்திய அரசு!
*தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை 26,513 ஆக குறைந்தது. 31,673 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
*கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை முதல் டோஸாக செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸாகவும் அதே மருந்தைத் தான் செலுத்திக் கொள்ள வேண்டுமெனவும், மருந்தை மாற்றக் கூடாது எனவும், நித்தி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் விளக்கம் அளித்துள்ளார்.
Corona Vaccine: கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் குழப்பங்கள் - மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
*நாட்டில், இதுவரை 18 முதல் 44 வயதுடைய 2 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். தமிழகத்தில் 13 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் முதல் டோசை போட்டுக் கொண்டுள்ளனர்.
*தமிழ்நாட்டில் கூடுதல் தலைமைச்செயலர் நிலையில் உள்ள ஜக்மோகன் சிங் ராஜு, சமூகநலத் துறை முன்னாள் செயலாளர் மதுமதி உள்பட 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
IAS Officer Transfer: தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!